ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் பூவே பூச்சூடவா. இந்த சீரியல் 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் கார்த்திக் வாசுதேவன், டெஸ்மா முரளிதரன், கிருத்திகா லட்டு, மதன் பாண்டியன், தினேஷ் கோபாலசாமி, மீனா குமாரி, உமா பத்மநாதன், யுவராணி, மோனிஷா அர்ஷக் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த சீரியல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் மக்கள் சக்தி மற்றும் மீனாட்சி இருவரும் அக்கா தங்கச்சிகள். சக்தியின் அக்கா மீனாட்சி பணக்கார பையனை காதலிக்க அந்தப் பையனின் அண்ணனை திருமணம் செய்யும் சூழலில் சக்தியிருந்தாள்.
ஆரம்ப காலகட்டத்தில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்து வந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஓரளவிற்கு பிடித்துப் போக ஆரம்பித்தது. பிறகு இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென்று சக்தி மற்றும் சிவா இருவரும் பிரியும் நிலைமை ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் சிவாவிற்கு ஆக்சிரென்ட் ஆனது அதனால் அனைத்தும் மறந்து விட்டது.
பிறகு சிறிது போராட்டத்திற்குப் பிறகு அனைத்தையும் புரிந்து கொண்டு சக்தி மற்றும் சிவா இவர்களின் மகன் மூவரும் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தார்கள். இவ்வாறு இந்த சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரேஷ்மா ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று நீங்க இடம் பிடித்திருந்தார்.
இந்த சீரியலில் அக்கா மீனாட்சியின் கணவனாக நடித்திருந்த மதனை காதலித்து இருவரும் கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இந்த சீரியல் முடிந்த பிறகு ரேஷ்மா ஜீ தமிழை விட்டுவிட்டு மற்ற தொலைக்காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அபி ட்ரைலர் சீரியலில் நடித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவி புதிய சீரியல் ஒன்றை இயக்க உள்ளதாம் எனவே அதில் ரேஷ்மா தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து ரேஷ்மாவை அந்த சீரியலில் ஒப்பந்தம் செய்து உள்ளார்களாம் இப்படிப்பட்ட நிலையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் இருந்து விலகுவார் என்று கூறப்படுகிறது.