தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் நடிகர் கமல் மற்றும் ரஜினி இவர்களுக்கு பின் பேசப்பட்டு வருபவர்கள் அஜித் மற்றும் விஜய் இவர்களின் படங்கள் ரிலீசாக போகிறது என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். அதேபோல இருவரின் ரசிகர்கள் யார் பெரியவர்கள் என்று சமூக வலைதளங்களில் ஒரு பனிபோரே நடைபெற்று வருகிறது.
அப்படி நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படமும் அஜித் நடித்து உள்ள துணிவு திரைப்படமும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இதற்காக விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே இணையதளத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறதாக கூறபடுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யை மறைமுகமாக அணில் என்று நொட்டிஷன்கள் அழைத்து வருகின்றனர் அந்த வகையில் இணையதளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது அந்த வீடியோவை பார்த்து விஜய்யை அணில்ஸ் என்று கிண்டலாக பேசி விமர்சித்து வருகின்றனர்.
அதாவது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அங்கு உள்ள நீச்சல் குளத்தின் அருகே ஒரு அணில் இருப்பதை கேமரா மூலம் காட்டி உள்ளனர். அது மட்டுமல்லாமல் அங்கு கொட்டி இருக்கும் உணவு பொருட்களை சாப்பிடும் அணிலை வைத்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வெளிப்படையாக விஜய்யை கலாய்த்து இருப்பது விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் அந்த அணிலை பார்த்து விமர்சித்த நெட்டிசன்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கப் போகிறார்கள் விஜய் ரசிகர்கள் என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்து வருகிறது.