தங்களுடைய டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக விஜய் டிவி கடந்த 5 வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் மிகவும் சுவாரசியமாக நகர்ந்து வருகிறது. மேலும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அதோடு மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் ஏராளமான கண்டனங்களை வாரி வழங்கிய வருகிறார்கள் எனவே கண்டண்டுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து வருகிறது. இவ்வாறு ஏராளமான சர்ச்சை கூறிய சண்டைகள் நடப்பதற்கு முக்கிய காரணம் 20 போட்டியாளர்களுடன் களமிறங்கி இருக்கிறது நிகழ்ச்சி. மேலும் 21வது போட்டியாளராக மைனா நந்தினியும் பங்கு பெற்ற நிலையில் ஏராளமான சண்டைகள் நடைபெற்று வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் வெளியேறினார் இவரை தொடர்ந்து இந்த வாரம் அசல் கோளாறு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இவ்வாறு இவர் வெளியேறியது ஏராளமான ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்து வருகிறது. பலரையும் இவர் வெறுப்பேற்றி வந்த நிலையில் அசல் கோளாறு இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது பற்றியும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அசல் கோளாறுக்கு ஒரு நாளைக்கு மட்டும் 15 முதல் 17 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறது அதன்படி பார்க்கையில் பிக்பாஸ் வீட்டில் மூன்று வாரங்கள் அதாவது 21 நாட்கள் இருந்துள்ளார். அதை வைத்து பார்க்கும் பொழுது லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 14,000 ரூபாய் என்று வைத்துப் பார்த்தால் 21 நாளைக்கு 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் அசல் கோளாறு சம்பளமாக பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இவரை ரசிகர்கள் மிகவும் வெறுப்பதற்கு முக்கிய காரணம் பெண்களை தடவ ரொமான்ஸ் செய்து வந்தது தான் இதன் காரணமாகத் தான் வெளியே போக வேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள்.