விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானவர் சுனிதா. மேலும் இவர் இளம் வயதிலேயே தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பள்ளி மாணவியாக நடித்திருந்தார். இப்படம் பெரிய அளவில் ஹிட் அடைந்தது. மேலும் ஸ்ருதிஹாசனும் இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறப்பாக ஜொலித்து வருகிறார்.
ஆனால் சுனிதாவிற்கு இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தரவில்லை. அதனால் பிறகு விஜய் டிவியில் நடக்கும் ஒரு சில நிகழ்ச்சிகளில் தனது நடனத் திறமையை வெளிக்காட்டி வந்தார். மேலும் இவர் நடன நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் பணிபுரிந்தார். இப்படி ஒரு சில நிகழ்ச்சிகளில் அப்பப்போ வந்து போய்க் கொண்டிருந்த இவருக்கு குக் வித் கோமாளி என்னும் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கோமாளியாக வாய்ப்பு கிடைத்தது.
மேலும் சுனிதா வட மாநிலத்து பெண் என்பதால் அவருக்குத் தமிழ் அதிகம் தெரியாது. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு தெரிந்த கொஞ்ச கொஞ்ச தமிழில் பேசப்படுவது மக்கள் பலராலும் ரசிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சுனிதா பிறகு காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் டிஎஸ்கே உடன் இணைந்து காமெடியில் பின்னி பெடல் எடுத்து வந்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் இந்த ஜோடிகள் முதலிடத்தை தட்டி சென்றனர். மேலும் இவர் சமூக வலைதளங்களில் சில ட்ரெண்டிங் பாடல்களுக்கு நடனமாடி வீடியோவை பதிவிடுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது போன்றவற்றை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் சுனிதா அவரது இன்ஸ்டா பக்கத்தில் நீச்சலுடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு நீச்சல் உடையில் செம்ம கும்முன்னு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.