கொழுந்தனை காதுபட திட்டும் மீனா.! மன உளைச்சலுக்கு ஆளான கதிர்..

pantiyan stores 04
pantiyan stores 04

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடர்ந்து சில வாரங்களாக முல்லைக்கு இயற்கையாக குழந்தை இல்லை என்பதை மையமாக வைத்தும் அவளை எப்படி குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் அவனுடைய கணவன் ஆகியோர் பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை வைத்துதான் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு தற்பொழுது இயற்கை முறையில் குழந்தை இல்லை என்ற பிரச்சனையினால் தற்பொழுது முல்லைக்கு செயற்கை முறையில் ஐந்து லட்சத்திற்கும் மேலாக செலவு செய்து கருத்தரிக்க வைத்து விடலாம் என்று முடிவு செய்து பிறகு மருத்துவமனையில் காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு முல்லையை மருத்துவமனையில் காட்டுவதற்காக மூர்த்தி 5 லட்ச ரூபாய் அங்கும் இங்கும் கடன் வாங்கி கொடுத்தான். எனவே மீனா கடன் வாங்கி சிகிச்சையை மேற்கொள்வது சரியில்லை என்று தொடக்கத்திலிருந்தே வலியுறுத்துகிறார். கதிர் காதில் விழும் அளவிற்கு மீனா பேசி வருவதால் கொஞ்சம் வருத்தப் படுகிறான்.

அதோடு தனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் இப்படி கடன் வாங்குவது எங்கு போய் முடியும் என்று தெரியல எனவும் என்னுடைய ஒரு வயது மகளையும் இந்த விஷயத்தில் மீனா இழுத்து விடுகிறார் எனவே கதிர் தன்னால் இந்த குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை வருகிறது என்று மன உளைச்சலுக்கு ஆளாகிறான்.

பிறகு எப்படியாவது முல்லைக்கு இந்தப் பிரச்சினை சரியாகி விட வேண்டும் என்றும் முல்லை  குழந்தையை பெற்று விட வேண்டும் என்று விடாப்படியாக இருப்பதால் இந்த சிகிச்சை பலன் இல்லாமல் போனால் அந்த 5 லட்சம் செலவு செய்து வேஸ்டாக போய்விடும் என்ற குழப்பத்தில் இருந்து வருகிறான். பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு எப்படியாவது குழந்தை பிறந்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.