முதன் முறையாக மீனா அப்பா செய்த நல்ல காரியம்.! கதறி அழும் கதிர்.!

meena father
meena father

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மிக அருமையான கதை உள்ளடக்கத்தைக் கொண்ட நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் நாடகம் மிகவும் சிறப்பு வாய்ந்த நாடகம் ஏனென்றால் இந்த நாடகத் தொடர் ஒரு கூட்டு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும்?கூட்டு குடும்பத்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதில் வரும் பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்க வேண்டும் என்பதை மக்களிடையே ஒரு புரிதலை ஏற்படுத்துகிறது.

இந்த நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான மீனாவின் அப்பா ஜனார்தன் எப்பொழுதும் இந்த குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்க நினைப்பார், ஏன் இக்குடும்பத்தை விட்டு எப்படியாவது தன் மகள் மற்றும் மருமகனை பிரித்து வர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறான் .

ஆனால் இப்படியெல்லாம் இருந்த இவர் தற்போது ஒரு நல்ல காரியத்தை செய்து உள்ளார் அது என்னவென்றால், இக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீடு கட்ட வேண்டும் என்ற முடிவெடுக்கிறார்கள். ஆனால் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் முல்லைக்கு மருத்துவ செலவு பார்க்க வேண்டுமென்று அந்த முடிவை கைவிடுகிறார்கள்.

இப்படி இருக்க மீனா இதை ஒப்புக்கொள்ளவில்லை இதனால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் தான் முல்லை கஸ்தூரி அத்தாச்சி சொன்னதை கேட்டு ஒரு கோயிலுக்கு செல்ல விரும்புகிறார், அங்கு சென்றால் அனைத்துக் குறைகளும் தீரும் என்று, அங்கு சில நேர்த்திக் கடன்களை செய்ய விரும்புகிறார்.

இதனால் கதிரிடம் முல்லை பொய் சொல்லிவிட்டு கோயிலுக்கு செல்கிறார், இதனை பார்த்த மீனாவின் அப்பா ஜனார்த்தன் அவர்களது வீட்டிற்கு சென்று அவர்களிடம் இது பற்றிக் கூறுகிறார் இதை கேட்டவுடன் கதிர் உடனே முல்லையே சந்திக்கச் சென்று முல்லை உடன் சேர்ந்து அவரும் அந்த நேர்த்திக்கடனை செய்து முடிக்கிறார். இதனை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் உள்ளனர்.