மூர்த்தி செய்த காரியத்தால் விபரீத முடிவை எடுத்த ஜீவா.! வருத்தத்தில் குடும்பத்தினர்கள்.

pandiyan stores 1
pandiyan stores 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் குடும்ப கதையை மையமாக வைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர் சீரியல் கூட்டுக் குடும்ப கதையை மையமாக வைத்து ஒளிபரப்பி வருகிறது.

நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவு மற்றும் மருமகள்களின் ஒற்றுமை ஆகியவற்றை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பி வருவதால் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சீரியலாக திகழ்கிறது.

இவ்வாறு பல பிரச்சனைகளுக்கு பிறகு ஜீவா மற்றும் கதிர் ஆகியோர்களின் திருமணம் முடிந்த நிலையில் கண்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்கள் அவரை சிறிது காலம் குடும்பத்தை விட்டு தள்ளி வைத்திருந்தார்கள் இதனால் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் தனியாக வாழ்ந்து வந்தார்கள்.

தற்பொழுது தான் அனைவரும் ஒன்றிணைந்து இருந்து வந்த நிலையில் திடீரென்று ஜீவாவின் மாமனாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மூர்த்தி ஜீவாவை மீனா அப்பாவின் கடையையும், கணக்கு வழக்கங்களையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறி உள்ளார்.

பிறகு பாண்டியன் ஸ்டோர் கடை பக்கமே மூர்த்தி ஜீவாவை விடாத காரணத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜீவா மீனாவின் அப்பா,அம்மா மற்றும் அண்ணன் உடன் இணைந்து குடிக்கிறான் பிறகு மீனா அப்பாவிடம் தனது மனக்குறையை கூறி அழுகிறான்.

பிறகு ஜீவா வீட்டிற்கு செல்ல அங்கே ஏன் இப்படி இவ்வளவு குடித்து வர என்று கேட்பதற்கு நடிப்பதற்கு அண்ணன் தான் காரணம் என கடைக்கு எப்போ வேணாலும் சொல்லிட்டாரு எனக்கு அந்த கடையில் உரிமை இல்லையா என கூறி ஜீவா அழுகிறான். எனவே இதற்கு மேல் மூர்த்தி அக்கறையாக ஜீவாவின் மீது நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.