கதிரை தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிய மீனா.! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சுக்குநூறாக உடைந்துள்ள நிலைமை..

meena-mullai
meena-mullai

வெள்ளித்திரை எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளதோ அதேபோல் சின்னத்திரைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு சின்னத்திரை தொடர்ந்து ஏராளமான ஷோக்கள் மற்றும் சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சிதான் விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நம்பர்-1 தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினையும்,தனது கணவனின் தம்பிகளை தனது மகன்களாக அண்ணியின் பாசத்தினையும், மருமகள்களின் ஒற்றுமையையும் மையமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் மூர்த்தி தனக்கு தெரிந்த சிலரிடம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி செயற்கை முறையிலாவது முல்லைக்கு குழந்தை பாக்கியத்தைப் பெற்று தந்து விட வேண்டும் என்று நினைத்து கடன் வாங்கினார்.

இவ்வாறு போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று மீனா,முல்லை,தனம் ஆகியோர்களின் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒன்றுகூடும் அவர்களது கடன்காரர்கள் வீட்டிற்கு முன்பு வந்து சத்தம் போட தனம் உடனே தனது கையில் போட்டிருந்த தங்க வளையலை கழட்டி ஜீவாவிடம் கொடுத்து இதனை போய் வித்துட்டு வந்து கடனை அடைக்க என்று கூறுகிறார்.

உடனே தனத்தின் அம்மா அந்த வளையல் பிடுங்கி இருக்கிற இதனையும் விட்டுட்டு என்ன பண்ண போற என்று கத்த உடனே மீனாவின் அப்பா இதெல்லாம் நாடகம் என்ற கூற கோபமடைந்த ஜீவா சட்டையை பிடித்து சண்டை போட ஆரம்பிக்கிறார்.

இது முடிந்த நிலையில் தற்பொழுது முல்லையின் அம்மா யாருமே நல்லா இருக்க மாட்டீங்க இந்த குடும்பம் நாசமா போய்டும் என்று சாப்பிட்டு விட்டு விட்டு வீட்டை விட்டு செல்கிறார். உடனே தனத்தின் அம்மா முல்லையின் அம்மாவை திட்டுகிறார்.

இவர்களைத் தொடர்ந்து மீனா கத்த உடனே ஜீவா மீனாவை அடைவதற்காக கையை ஓங்குகிறார். உடனே மீனாவின் அப்பா என் மகளின் மீது தூசி கூட விழாத அளவிற்கு வளர்த்தேன் ஆனால் என் கண்ணு முன்னாடியே இப்படி அவளை அடிக்க போறீங்க எனக்கூறி கத்துகிறான்.

இவ்வாறு நடப்பதை பார்த்தால் மீனாவும் தனது குடும்பத்துடன் செல்ல உள்ளார். கதிரும் வீட்டை விட்டு போன நிலையில் பாண்டியன் ஸ்டோர் குடும்பமே சுக்குநூறாக உடைந்து இருக்கிறது.