பாண்டியன் ஸ்டோர் சீரியலுகாக தன்னுடைய குடும்பத்தையே எதிர்த்துள்ள நடிகை.!

pandiyan-stores

தற்பொழுது எல்லாம் கூட்டு குடும்பம் என்றால் என்ன என்பதை தெரியாமல் வாழ்ந்து வருகிறார்கள் மேலும் அனைவரும் தனித்தனியாக வாழ தான் ஆசைப்பட்டு வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வரும் தலைமுறையினருக்கு கூட்டு குடும்பம் என்பது என்னவென்று தெரியாமல் கூகுளில் சர்ச் செய்து பார்க்கும் அளவிற்கு வந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் இந்த காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு உணர்த்தும் வகையில் கூட்டு குடும்பம் என்றால் என்ன அதில் எவ்வளவு நல்லது இருக்கிறது மேலும் எப்படி அனைத்தையும் சமாளிக்க வேண்டும் என அனைத்தையும் அழகாக உணர்த்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கும் குடும்பத்தில் நான்கு மருமகள்கள் வருகிறார்கள் இருந்தும் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லாமல் அப்படி பிரச்சனை இருந்தாலும் எவ்வளவு ஒற்றுமையாக பாசமாக இருக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்பொழுது பெரிய பிரச்சனை ஆனால் கதிர் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் அவர் 5 லட்சம் ரூபாய் கடனை அடைத்து விட்டு தன்னுடைய குடும்பத்துடன் இணைய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.

இதனால் ஹோட்டலில் தொடர்ந்து தன்னால் முடிந்த வருமானங்களை சம்பாதித்து வருகிறார் மேலும் இதனை தொடர்ந்து தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை மீனாவின் அப்பாவிற்கு விற்று உள்ள நிலையில் தற்போது அவரின் நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் புதிய வீடு கட்ட இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

sai kayathri
sai kayathri

தற்பொழுது வரையிலும் இந்த கதாபாத்திரத்தில் இரண்டு பேர் மாற்றப்பட்டுள்ள நிலையில் மூன்றாவதாக சாய் காயத்திரி நடித்து வருகிறார் முதலில் இந்த சீரியலின் நடிப்பதற்காக அவரின் வீட்டிலேயே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் மேலும் ஏற்கனவே இரண்டு பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நெகட்டிவ் எண்ணம் உள்ளது என கூறினார்களாம் இதன் காரணமாக சாய் காயத்திரி ஒரு மூன்று மாதம் வீட்டை விட்டு வெளியே தங்கி நடித்து வந்தாராம் இது குறித்து சமீப பேட்டி ஒன்றில் இவர் கூறியிருந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.