லஞ்சம் வாங்கிய தம்பியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய மூர்த்தி.! கதிர் செய்வது பிடிக்காமல் வருத்தத்தில் முல்லை..

pandiyan-stores
pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் இன்று வெளியாக உள்ள எபிசோடில் மூர்த்தி பேசியதை நினைத்து கண்ணன் அழுது கொண்டிருக்கிறான் பிறகு கண்ணனுக்கு ஐஸ்வர்யா ஆறுதல் கூறுகிறார். கண்ணன் எனக்கு என்ன என்று தெரியாது நான் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தேன் அவர்களாகத்தான் காசு கொடுத்தார்கள் என கண்ணன் வருத்தப்படுகிறார்.

மேலும் அண்ணன் இப்படி பேசுவார் என தெரியாமல் நான் வாங்கி இருக்கவே மாட்டேன் என கண்ணன் கூறிய அழுகிறார் அதற்கு ஐஸ்வர்யாவும் சரி விடு எனக் கூறிய பிறகு கண்ணன் எனக்கு அண்ணனை பார்க்கவே வருத்தமாக இருப்பதாக கூறுகிறார் இதனை தொடர்ந்து பிறகு ஜீவா கதிர் கடையில் இலவசமாக பிரியாணி கொடுக்கிறானாம் அவன் மீது உள்ள கோபத்தை இவன் மீது காட்டி விட்டார் அண்ணன் என ஜீவா சொல்ல தனம் அதிர்ச்சடைகிறார்.

ஏன் இவன் எந்த விஷயத்திற்கும் நிதானமாக யோசிக்காமல் இருக்கிறான் என தனம் கேட்க ஜீவா நான் கேட்கலாம் என பார்த்தாலும் அண்ணன் கோபப்படுகிறார் என கூறுகிறார் பிறகு தனம் யாராவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லணும் என கூறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் முல்லை சமைத்து கொண்டிருக்க கதிர் வந்து பேசுகிறார்.

ஆனால் முல்லை சரியாக பேசவில்லை கதிர் என்னாச்சு என கேட்க வாழ்க்கையை நினைத்து கவலையாக இருப்பதாக முல்லை சொல்கிறார் என் மீது நம்பிக்கை இல்லையா எனக் கதிர் கேட்க எனக்கு பயமாக இருப்பதாக முல்லை சொல்கிறார். மறுபுறம் கண்ணன் மூர்த்தி பேசியதை இணைத்து கவலைப்படுகிறார் மேலும் அனைவரும் இதனால் சாப்பிடாமல் இருக்கின்றனர்.

பிறகு மூர்த்தி அனைவரையும் சாப்பிட வர சொல்ல ஆனால் கண்ணனை மூர்த்தி கூப்பிடவில்லை எனவே ஐஸ்வர்யா கண்ணனை கூப்பிட அவன் வரவில்லை சாப்பாடு வேண்டாம் என கூறிவிடுகிறார். பிறகு மூர்த்தி கண்ணனை அழைத்து சாப்பிட வர சொல்ல அண்ணன் கோபத்தில் பேசினால் அதனால் சாப்பிடாமல் இருப்பியா எனக் கேட்கிறார் அதன்பிறகு கண்ணனுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார் மூர்த்தி. பிறகு கண்ணனும் உங்கள் மீது தவறு இல்லை உங்கள் தம்பியாக இருந்து கொண்டே நான் இவ்வாறு செய்தது தவறு என நான் சொல்கிறார்.

அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் மூர்த்தி தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார் அதனைப் பார்த்து தனம் என்ன ஆச்சு என கேட்க கதிர் ஏன் இப்படி இருக்கான் இலவசமாக பிரியாணி கொடுக்கிறான் யார் பேச்சையும் இப்படி கேட்காமல் இருக்கிறான் என நினைத்து வருத்தப்படுவார் இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.