விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தன்னுடைய மனைவிக்காக 5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கிய நிலையில் அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டை விட்டு வெளியேறிய கதிர் ஒரே மாதத்தில் ஹோட்டல் தொழில் ஆரம்பித்துள்ளார் மேலும் சக்காளத்தி மல்லிகாவிடம் ஒரே மாதத்தில் லாபம் காட்டுவேன் எனவும் சவால் விட்டுள்ள நிலையில் இதற்காக கதிர் காலையில் டிபன் உடன் சேர்த்து மதிய உணவையும் சமைத்துக் கொடுத்தார்.
மேலும் அசைவ உணவுகளையும் அறிமுகப்படுத்தி பல முயற்சிகள் செய்து வந்த நிலையில் நஷ்டம் குறைந்ததே தவிர பெரிதாக லாபம் கிடைக்கவில்லை இதனால் இரண்டு நாட்களில் ஹோட்டலில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக கடைசியாக வாடிக்கையாளர்கள் வருவார்கள் என்று நம்பிக்கையில் அதிரடி முடிவை எடுத்துள்ளார் கதிர். அதாவது இன்று ஹோட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி இலவசமாக கொடுப்பதாக பலகையில் எழுதி ஹோட்டலுக்கு முன் வைத்துள்ளார்.
இதனை பார்த்த வாடிக்கையாளர்களும் ஹோட்டலில் குவிந்து பிரியாணியை இலவசமாக வாங்கி சாப்பிடுகிறார்கள் சாப்பிட்ட பிறகு அவர்களால் முடிந்த பணத்தையும் உண்டிலில் போடுகிறார்கள் மேலும் பலரும் சாப்பிட்டுவிட்டு உண்டியலில் எதுவும் போடாமலும் செல்கிறார்கள் இதனை பார்த்த மல்லிகா கிண்டல் அடிக்கிறார் ஒரு சிலர் மட்டுமே மனசாட்சிக்காக பிரியாணி சாப்பிட்டதற்கு தகுதியான பணத்தை உண்டியில் போடுகிறார்கள்.
இதனால் கதிர் எடுத்த முடிவு சரிதான் என பலரும் நினைக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் கண்ணன் பைனான்ஸ் ஆபீஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் மேலதிகாரி லஞ்சமாக பெறும் பணத்திற்கு கண்ணனும் உறுதுணையாக நிற்கிறார் இதனால் கண்ணனுக்கும் ஒரு பகுதி தொகையில் அஞ்சமாக கொடுக்கிறார்கள்.
ஆனால் அதனை கண்ணன் ஏற்க மறுக்கிறார் பிறகு ஒரு கட்டத்தில் கண்ணன் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார் இவ்வாறு நேர்மையான பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இவ்வாறு கண்ணன் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணத்தினால் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக கண்ணன் பிரச்சனையில் மாட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது.