என்னால் கடைக்கு வர முடியாது என கதிரிடம் கோபப்படும் முல்லை.! இடம் வாங்குபவரிடம் பணம் கொடுத்தே ஆக வேண்டுமா என மூர்த்தியிடம் கேட்கும் மீனா..

pandiyan-stores-1
pandiyan-stores-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்பொழுது மூர்த்தி தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் சமாதத்துடன் பூர்வீக வீட்டை விற்றுள்ள நிலையில் விரைவில் புதிய வீடு கட்ட இருக்கிறார்கள் அதற்கான வேலையில் இருந்து வருகிறார் இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனம் பாண்டியனை தூங்க வைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

அப்பொழுது மூர்த்தி தனத்தை கூப்பிட ஆனால் தனம் கோபமாக இருக்கிறார் மூர்த்தி தலை வலிப்பதாக கூற தனம் தேவையில்லாததுக்கு கோபப்பட்டால் அப்படி தான் தலை வலிக்கும் என சொல்கிறார் பின் மூர்த்தி தேவையில்லாமல் வெளியே போனான் அதனால் தான் எனக்கு கோபம் வந்ததாக சொல்கிறார். பிறகு மூர்த்தி வீடு கட்டுவது பற்றி பேசுகிறார் எனவே தனம் சமாதானம் ஆகிறார்.

மறுபக்கம் கதிர் காலையில் எழுந்தவுடன் முல்லையிடம் பேச ஆனால் முல்லை கோபமாக இருக்கிறார் கதிர் முல்லையை கிளம்பச் சொல்ல ஆனால் முல்லை நான் வரவில்லை எனக்கு வேலை இருக்கிறது என சொல்கிறார். நைட்டு சொன்னது போல தான் செய்ய போறீங்களா என கேட்க ஆமாம் என கதிர் சொல்கிறார். நீங்கள் செய்வது சரியில்லை என சொல்ல ஆனால் கதிர் அதில் என்னை எதுவும் சொல்லாதீங்க என்ன சொல்கிறார்.

பிறகு கதிர் எதுவானாலும் கடையில் பேசிக்கொள்ளலாம் என சொல்ல ஆனால் முல்லை நான் கடைக்கு வரவில்லை என கூறி விடுகிறார். கதிர் மட்டும் கடைக்கு வர முருகன் சாம்பாருக்கு பருப்பு ஊற போடவா என்று கேட்கிறார் வேண்டாம் என சொல்லிவிட்டு சிக்கன் பிரியாணி செய்கிறார். எனக்கு புரியவில்லை என முருகன் சொல்கிறார் ஆனால் கதிர் என்னிடம் எதுவும் பேசாதீங்க என சொல்கிறார் பிறகு கதிர் வேலையை பார்க்க தொடங்குகிறார்.

மேலும் இதனைத் தொடர்ந்து மூர்த்தியின் வீட்டில் இடம் விற்ப்பவர் ஒருவர் வருகிறார் வந்து பணம் கேட்கிறார் அந்த இடமே 30 லட்சம் தான் உடனே பணம் கொடுக்க வேண்டுமா என மீனா கேட்க மூர்த்தி பணம் கொடுத்தால் தான் வேலை மிச்சம் என சொல்கிறார். பின் பணம் வாங்குபவரும் வர பணத்தை வாங்கிக் கொள்கிறார் இவ்வாறு ஒரு புறம் பாண்டியன் ஸ்டோர் வீட்டில் சண்டையும் மற்றொருபுறம் கதிர் முல்லை என ஒரே பிரச்சனையாக போய்க் கொண்டிருக்கிறது.