கதிரின் கை, காலை உடைக்கத் திட்டம் போட்ட கும்பல்.! கடுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

pandiyan stores 2
pandiyan stores 2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு தான் இதற்கு மேல் வீட்டிற்குள் வருவேன் என கதிர் சபதம் போட்டிருக்கிறார்.

எனவே இதனை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் கடைசியாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்தார். ஹோட்டலிலும் ஏராளமான தள்ளுபடிகள் உடன் உணவுகள் அளித்து வந்தார். எந்த ஒரு முயற்சியும் கை கொடுக்காத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக முல்லை செய்தி தாள் மூலம் சமையல் போட்டி ஒன்றில் தங்களுடைய பெயரை கொடுத்திருந்தார் அதில் வெற்றி பெற்றால் 10 லட்சம் தருவதாகவும் கூறியிருந்தார்கள்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என கதிர் கூறியும் முல்லையின் பிடிவாதத்தால் தற்பொழுது கலந்து கொண்டு ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் இதன் காரணத்தினால் மற்ற போட்டியாளர்கள் கதிர், முல்லை ஜோடியின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

மேலும் கதிர் முல்லை இருவரும் கணவன் மனைவியை இல்லை எனவும் கூறி வருகிறார்கள். அந்த நேரத்தில் முல்லையை வேறு ஒருவருடன் தொடர்புபடுத்தி பேசுவதை கேட்கும் கதிரால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் கைகாலத்தில் ஈடுபடுகிறார். கதிரிடம் அடி வாங்கிய அந்த போட்டியாளர் எப்படியாவது கதிரின் கை, காலை உடைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார் பிறகு போட்டி முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்து கொள்கிறார்கள். இதனை மறைந்து ஓட்டு கேட்ட முல்லை கதிரிடம் சொல்ல கதிர் அவர்களிடம் மீண்டும் சண்டைக்கு நிற்கிறார்.

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் தங்களுடைய குடும்பத்துடன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக தன்னுடைய குடும்பத்திற்காக இந்த போட்டியில் இருந்து எப்படியாவது வெளியேறிவிடலாம் என பார்க்கிறார் ஆனால் இந்த போட்டியில் இருந்து வெளியேற முடியாமல் கடைசி சுற்றில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

கடைசி சுற்றிலும் கதிர், முல்லை இவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமையான காதலால் வெற்றி பெற்று பத்து லட்சத்தை குடும்பத்தில் அவர்களிடம் தருகிறார்கள் மேலும் இவ்வாறு இது நடந்தால் முல்லை நன்றாக வீட்டில் அனைவரும் வாழலாம் என ஆசைப்படுகிறார். ஆனால் முல்லை, கதிர்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அங்கு காத்திருக்கும் நிலையில் அனைவரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.