ஐம்பதாயிரம் பணத்தை கடையில் மறந்து வைத்துவிட்டு சென்ற கண்ணன்.! ஐஸ்வர்யா குடும்பத்தினர்களிடம் என்ன சொல்லப் போகிறார்.. விறுவிறுப்பான எபிசோட்களுடன் பாண்டியன் ஸ்டோர் சீரியல்

pantiyan-stores
pantiyan-stores

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் தற்பொழுது ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக கதிர் வீட்டை விட்டு கிளம்பி தனியாக வாடகை வீட்டில் தங்கி வருகிறார்.

மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்த நிலையில் அனைவருக்கும் தெரிந்ததும் ஹோட்டலில் இருந்து வேலை செய்வதை நிறுத்தினார். பிறகு தற்பொழுது தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து சின்னதாக ஹோட்டல் ஆரம்பிக்கிறார்கள்.இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் கண்ணன் தனது வேலைக்கு 50 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்பதற்காக தனத்திடம் பணம் கேட்கிறார்.

தனமும் தர தருகிறேன் எனக் கூறி வந்த நிலையில் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா தனத்திடம் ஐம்பதாயிரம் பணம் கேட்டிருந்தேன் என கூறியதற்கு தனம் பணம் ஐம்பதாயிரம் ரெடியாக இருக்கிறது என கூறுகிறார் பிறகு கடையில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூற மீனா தற்பொழுதெல்லாம் சொந்தக்காரர்களே ஏமாற்றி விடுகிறார்கள் எனக் கூறியதும் தனம் ஜீவாவை கண்ணனுடன் போக சொல்கிறார்.

பிறகு அனைவரும் கடைக்குப் போயிருந்த நிலையில் ஐஸ்வர்யா மீனாவிடம் ஏன் கண்ணனுடன் ஜீவா மாமாவை அனுப்பி வைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவன் சின்ன பையன் இன்னும் பொறுப்பு இல்லை என கூறுகிறார் பிறகு நல்லதுக்கு காலமில்லை எனக் கூறிவிட்டு மீனா தனது குழந்தையை தூக்கிக் கொண்டு தனத்திடம் செல்கிறார்.

அங்கு போய் இவ்வாறு ஐஸ்வர்யா என்னிடம் சண்டை போடுகிறாள் என கூற தனம் ஜீவாவை கண்ணுடன் போக வேண்டாம் என சொல்லி விடுகிறார். கண்ணனும் ஐம்பதாயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தனியாக செல்கிறார் அங்கு ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருக்கிறார் அந்த கடையிலேயே ஐம்பதாயிரம் பணம் இருக்கும் பையை வைத்துவிட்டு மறந்து கிளம்பி விடுகிறார். இதனை சரியாக கவனிக்காமல் கண்ணன் போய்க் கொண்டிருக்கிறார் நாளை எபிசோடில் தான் என்ன நடக்கும் என்பது தெரியவரும்.