50ஆயிரம் கேட்டு நச்சரிக்கும் ஐஸ்வர்யா.! ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர் சீரியல் இன்றைய எபிசோட்

pantiyan-stores
pantiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த சீரியலில் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு சென்ற நிலையில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கிறார்.மேலும் அதற்கு தேவையான பொருட்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வாங்கிக் கொள்கிறார்.

இதனை தொடர்ந்து இன்று வெளியாக உள்ள எபிசோடில் மூர்த்தியின் அப்பாவிற்கு நினைவு நாள் என்பதால் அனைவரும் கோவிலுக்கு சென்று பிரசாதம் வழங்குகிறார்கள் அப்பொழுது முல்லை,கதிர் இருவரும் பிரசாதம் வாங்குவதற்காக வரிசையில் நிற்க அதற்குள் தீர்ந்து விடுகிறது. பிறகு மூர்த்தி யாருக்கும் தெரியாமல் பிரசாதம் வைத்து வர அதனை கதிரும்,முல்லை இருவரும் எடுத்து சாப்பிடுகிறார்கள்.

பிறகு வீட்டிற்கு வந்தவுடன் இதனைப் பற்றி ஜீவாவிடம் மீனா குடும்பமா சேர்ந்து ட்ராமாபோடுறீங்க எனக் கூறிய பிறகு நம்மளும் வீட்டை விட்டு வெளியே போயிட்டா உங்க அண்ணனுக்கு பழகிப்போயிடும் பிறகு கண்ணனும் வீட்டை விட்டு வெளியே போறன்னு சொன்னா இன்னும் பழகிப் போயிடும் என கூற அதற்கு ஜீவா இதைக் கேட்டாவே கோபம் வருது என கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

அதன் பிறகு ஐஸ்வர்யா தனத்திடம் எனக்கு ஐம்பதாயிரம் பணம் கட்ட வேண்டும் என சொல்லியிருந்தேன் ஞாபகம் இருக்கா என கேட்டதற்கு பணம் ரெடியாக இருக்கிறது என கூறுகிறார் பிறகு மீனா யாரையும் நம்ப முடியாது ஏமாத்திடுவாங்க எனவே கண்ணனும் ஜீவா இருவரும் சேர்ந்து பணம் கட்டட்டும் என கூறுகிறார்.

தனமும் மூர்த்தியும் ஆமாம் ஜீவாகும் போகட்டும் எனக் கூறிவிட்டு அனைவரும் வேலை பார்க்க போய் விடுகிறார்கள். பிறகு ஐஸ்வர்யா மீனாவிடம் ஏன் கண்ணன் மட்டும் போகக்கூடாது ஜீவா மாமாவையும் அனுப்பி வைக்கிறீங்க என கேட்டதற்கு இவன் சின்ன புள்ள இன்னும் பொறுப்பே இல்ல இவனை நம்பி எப்படி ஐம்பதாயிரம் தரது எனக் கேட்க ஐஸ்வர்யா மிகவும் கோபப்படுகிறார் பிறகு மீனா இப்பொழுதெல்லாம் நல்லதுக்கு காலமே எனக் கூறிவிட்டு தனது குழந்தையை தூக்கி விட்டு வெளியில் செல்கிறார்.