விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது கதிர் தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் எப்படியாவது முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கி பணத்தை தர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். தற்பொழுது இருக்கும் பணத்தை வைத்து ஹோட்டல் வைக்க இருக்கிறார்கள்.
அதற்கு தேவையான பொருட்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையிலேயே வாங்க உள்ளார்கள். இப்படிப்பட்ட நிலை இன்று வெளியாக உள்ள எபிசோடில் மீனா ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்த நிலை வீட்டிற்கு வந்ததும் நான் கடைக்கு போகமாட்டேன் என்னால் வேலை பார்க்க முடியவில்லை எனக் கூறுகிறார்.
பிறகு ஜீவா நான் தான் உன்னால் வேலை பார்க்க முடியாது என்று சொன்னேன்ல வீட்டில் வேலை பார்க்க வேண்டியது தான கடையிலும் வேலை பாரக்க முடியாது வீட்டிலும் வேலை பார்க்க முடியாது என்றால் என்ன அர்த்தம் இதில் யார் மேல் தப்பி இருக்கிறது. உங்களால் அண்ணி கடையில் வேலை பார்க்கும் பொழுது நிம்மதி இல்லாமல் இருக்கிறார்.
குடும்பம் என்றால் சண்டைதான் வரும் எல்லாத்தையும் ஏற்றுக்கொண்டு தான் வாழ வேண்டும். கூறிக் கொண்டிருக்கும் பொழுது எங்க அப்பா வீட்டிற்கு போகிறேன் என மீனா கூறுகிறார். ஜீவா கோபப்பட்டுக் கொண்டிருக்கிறார் இந்த நேரத்தில் மீனாவின் அப்பா ஜகார்த்தனன் தனது மனைவியுடன் வருகிறார்கள்.
பிறகு ஜகார்த்தனன் கடையில் வேலை பார்க்க மிகவும் சிரமமாக இருக்கிறது அனைத்து வேலைகளையும் தனியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என அனைவரிடமும் கூறுகிறார். மாப்பிள்ளை தான் கொஞ்ச நாள் கடையை பார்த்துக்க சொன்னா அவர் வர மாட்டேங்குறாரு என கூறுகிறார். எனவே மூர்த்தி கொஞ்ச நாளைக்கு ஜீவாவை இரண்டு கடைகளையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.
எப்டியாவது ஜீவாவை மூர்த்தியின் குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் ஜகார்த்தனன் ஆனால் ஜீவா முடியாது என ஒரே பிடிவாதமாக இருந்து வரும் நிலையில் இதற்கு மேல் என்ன நடக்க இருப்பது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.