விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் ஒரு குடும்ப கதையை மையப்படுத்தி கதையாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்த நாடகம் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, ஏனென்றால் குடும்பத்தின் ஆணிவேராக இருந்த மூர்த்தி தற்போது உடல்நிலை குறைவால் ஓய்வு எடுக்கிறார், கதிரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
இந்நிலையில் கடையை யார் பார்த்துக் கொள்வது என்ற நிலையில் தனம் கடையை பார்த்துக் கொள்ள முடிவு செய்து கடையில் வேலைகளை பார்த்து வந்த நிலையில், வீட்டில் மீனாவும், ஐஸ்வர்யாவும் வீட்டு வேலைகள் செய்யும் போது சண்டையிட்டுக் கொள்கின்றனர் அடிதடி இல்லை என்றாலும் பேச்சுவார்த்தையில் தினமும் சண்டை ஏற்படுகிறது.
இப்படி அடிக்கடி சண்டைகள் நிகழ மீனா ஒரு முடிவெடுக்கிறார் நான் இனி இங்கு வீட்டில் இருக்க மாட்டேன் நான் கடைக்கு செல்கிறேன் நீங்கள் இங்கே இருங்கள் என்று தனத்திடம் கூறுகிறார், இதனை முதலில் கேட்டவுடன் கிண்டல் செய்து சிரிக்கிறார்கள் ஆனால் மீனா நான் சென்றே தீறுவேன் என்று பிடிவாதத்துடன் கடைக்கு செல்கிறார்.
கடையில் வேலைகள் மிக அதிகமாக இருப்பதால் இதற்கு வீடே தேவலாம் என்று நினைக்க தொடங்குகிறார் மீனா, மீனாவிற்கு சாப்பாடு கொண்டு சென்ற ஐஸ்வர்யா அங்கு மீனா படும் கஷ்டத்தை பார்க்கிறார் ஏனென்றால் அன்று கடையில் மிக அதிகமான கூட்டம் இருப்பதால் மீனா மிகவும் சிரமப்படுகிறார் இதனை பார்த்த ஐஸ்வர்யா அவருக்கு உதவி செய்கிறார்,உதவி செய்வதைக் கூட மீனாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இதன் பிறகு அன்றைய தினம் முழுவதும் கடையிலேயே முடித்த மீனா வீட்டிற்கு நடக்க முடியாமல் நடந்து வருகிறார், மிகவும் சோர்வாக வந்த மீனா வீட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறார் அது என்னவென்றால் நான் இனி கடைக்கெல்லாம் போக மாட்டேன் அங்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது,நான் இங்கேயே வீட்டிலேயே இருந்து விடுகிறேன் என்று கூறுகிறார். இதனைக் கேட்ட அனைவரும் ஷாக் ஆகி நிற்கிறார்கள்.