விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்த இந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது கதிர் இந்த வீட்டை விட்டு சென்று தனியாக வாழ்ந்து வருகிறார். மீதம் உள்ள மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
தற்பொழுது மூத்த அண்ணியான தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு வேலை பார்ப்பதற்காக சென்று விடுவதால் வீட்டில் வெட்டியாக இருந்து வரும் ஜீவாவின் மனைவி மீனா மற்றும் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா இருவரும் அடிக்கடி சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் ஐஸ்வர்யா வீட்டையும் விட்டு வைக்காமல் ஒரு பெரிய பிளான் போட்டுள்ளார்.
அதாவது கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது கண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்து வந்த இவர் அவருடைய தோழி பியூட்டி பார்லர் கடையில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொடுத்ததால் அதனை வைத்து வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம் என முடிவு செய்கிறார்.
இதனால் பொறாமையில் மீனா ஐஸ்வர்யாவுடன் வாய் தகராறு ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும் கண்ணனிடம் அவளை வேலை பார்க்க உடாத உன்னை மதிக்க மாட்டாள் என ஏற்றி விடுகிறார் மேலும் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லரை நடத்துவதாக கூறிய நிலையில் மூர்த்தி,தனம்,ஜுவா இவர்கள் முதலில் மறுத்துவிட்டார்கள் அதன் பிறகு சம்மதம் தெரிவித்தனர்.
ஆனால் மீனா மட்டும் வீட்டில் பியூட்டி பார்லர் வைக்க கூடாது என தடையாக இருந்து வருகிறார் ஏனென்றால் வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்தினால் அடிக்கடி ஆள் வருவார்கள் அது தொந்தரவாக இருக்கும் என கூறி வருகிறார்.
இவ்வாறு பியூட்டி பார்லர் வைப்பதன் மூலம் ஐஸ்வர்யா ஒரு வேலை வளர்ந்து விடுவாரோ என வைத்து எரிச்சலில் மீனா பல அட்டகாசங்களை செய்து வருகிறார். இவ்வாறு அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருக்கும் நிலைகள் மருமகள்கள் வீட்டில் எல்லை மீறிய சண்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.