விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒலிபரப்பாகி வரும் நிலையில் தற்பொழுது மூர்த்தி இரண்டாவது தம்பி கதிர் மற்றும் அவருடைய மனைவி முல்லையின் மருத்துவ செலவிற்கு வாங்கி 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி அடைத்துவிட்டு தான் வீட்டிற்குள் வருவேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
மேலும் வாடகை வீட்டில் தங்கி வரும் அவர் தற்பொழுது புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில் முதல் நாள் வியாபாரம் முடிந்துள்ளது. எனவே முதல் நாளில் முல்லை மற்றும் அவருடைய அக்கா வரவு செலவு கணக்கை பார்க்கிறார்கள் அப்பொழுது ஆயிரம் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கிறது தெரியவர கதிரை தர குறைவாக மல்லிகா பேசுகிறார் உடனே கதிர் ஒரே மாதத்தில் இந்த கடையில் லாபம் வரும் என்பதை காட்டுகிறேன் என மல்லிகாவிடம் சவால் விட்டு உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் கதிரின் ஹோட்டலில் சாப்பிட்ட அனைவரும் சாப்பாடு நல்லா இருப்பதாக சொன்னதால் அடுத்த நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது இதனால் கண்டிப்பாக ஹோட்டல் வியாபாரத்தில் கதிர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடை திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வந்து கதிரை வாழ்த்தினார்கள்.
அந்த வகையில் மூர்த்தி கண்ணனிடம் எதுவும் தெரியாது போல் கதிரின் கடையை பற்றி விசாரிக்கிறார். இவ்வாறு அந்த நேரத்தில் மூர்த்தி கதிரின் கடைக்கு சாப்பிட்டதை பெரிதாக ஏப்பம் விட அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. மேலும் யாருக்கும் தெரியாமல் முதல் வியாபாரத்தை தொடங்கி வைத்த மூர்த்திக்கு கூடுதலாக சில உணவுகளை கதிர் கொடுத்து அனுப்பியதால் மூர்த்தி மூக்கை பிடிக்கும் அளவிற்கு நன்றாக சாப்பிட்டு தன்னுடைய முழு பசியையும் அடக்குகிறார்.
இந்த நேரத்தில் இரவு உணவு சாப்பிட மூர்த்தியை அனைவரும் வற்புறுத்துகிறார்கள் ஏனென்றால் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருக்கும் நிலையில் மூர்த்திக்கு சாப்பிடாமல் இருந்தால் ஏதாவது ஆயிருக்குமோ மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுகிறார்கள்.
பிறகு மூர்த்தி கதிரின் கடையில் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டதை சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்த நேரத்தில் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்களிடம் இன்று அனுமதி கேட்க போகிறார் ஏற்கனவே இவர்களிடம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தற்பொழுது கதிரின் பாண்டியன் ஹோட்டல் இதனைத் தொடர்ந்து மூன்றாவதாக பியூட்டி பார்லர் ஒன்றை துவங்கப் போகின்றனர்.