விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனது மனைவியின் மருத்துவச் செலவிற்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக கதிர் தனது வீட்டில் இருந்து வெளியில் வந்து புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
மேலும் இவருடைய கடையின் திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒவ்வொரு வாராக வந்து தங்களது ஆசீர்வாதங்களை கொடுத்தார்கள் இதனை தொடர்ந்து மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சர்ச்சையாக பார்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறு அனைத்தும் முடிந்தவுடன் முல்லை கடையின் முதல் நாள் வசூல் எவ்வளவு என பார்க்கிறார்.
இந்த நேரத்தில் முல்லையின் அக்கா சென்று பிரச்சனையை தூண்டுகிறார் அதாவது முதலில் கணக்கு வழக்குகளை பார் எனும் கூறுகிறார். அவ்வாறு பார்க்கும் பொழுது முதல் நாளே ஆயிரம் ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது கதிர் முல்லையின் ஹோட்டல். உடனே மல்லிகா முதல் நாளே நஷ்டம் என்றால் இந்த கடையை ஊற்றி மூட வேண்டிய நிலைமை தான் என வாய்க்கு வாய் சண்டையை உருவாக்குகிறார்.
உடனே இதனால் கோபமடைந்த கதிர் ஒரே மாசத்தில் கடையை லாபத்தில் கூட வைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார். இந்த நேரத்தில் முல்லையின் அக்கா ஒரே மாதத்தில் 50 ஆயிரம் லாபம் எடுத்தால் நீ பெரிய ஆளுன்னு ஒத்துக்கிறேன் என சொடக்கு போட்டு சவால் விடுகிறார். இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு கதிரும் இந்த சவாலை ஏற்று 30 நாளுக்குள் ஐம்பதாயிரம் லாபத்தை எடுத்துக் காட்டுகிறாரா என பார்க்கலாம் என கூறி வருகிறார்கள்
கடந்த வாரம் சூரியவம்சம் படத்தை காப்பி அடித்த நிலையில் இதனை தொடர்ந்து அண்ணாமலை திரைப்படத்தின் காப்பியடித்து எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் இதனை தொடர்ந்து அடுத்ததாக சூரியவம்சம் திரைப்படத்தில் ஒரே பாடலில் எப்படி ரஜினி பணக்காரர் ஆவாரோ அதேபோல் கதிர் இரவும் பகலமாக உழைத்து கடை லாபமடை செய்வார் இதுதான் நடக்க இருக்கிறது மேலும் சவாலில் ஜெயித்து மல்லிகாவை தலைகுனிய வைக்கப் போகிறார் கதிர்.