விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது மனைவியின் மருத்துவ செலவிற்காக 5 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ள நிலையில் அதனை அடைத்து விட்டு தான் தனது வீட்டிற்கு போக வேண்டும் என்ற முடிவோடு கதிர் இருந்து வருகிறார்.மேலும் முல்லையும் கதிருக்கு துணையாக இருந்து வரும் நிலையில் தற்போது இவர்கள் புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளார்கள் அதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளார் கதிர்.
பொதுவாக கதிர் தனது குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பதால் கடையின் திறப்பு விழாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வருவார்கள் என வழி மேல் விழி வைத்து காத்து வருகிறார்.ஆனால் முல்லை உடைய அப்பா, அம்மா இருவர் மட்டுமே கடை திறப்பு விழாவிற்கு வருகிறார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து முல்லை அழைக்காமல் விருந்தாளியாக முல்லையின் அக்காவும் வந்திருக்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கடை திறப்பு விழாவிற்கு வர மாட்டார்கள் என முல்லையின் அக்கா மற்றும் அம்மா இருவரும் கதிரை பேசி அவமானப்படுத்துகிறார்கள்.இதன் காரணமாக தனது குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் வரவில்லையே என்ற வருத்தத்தில் கதிர் இருந்து வருகிறார். மேலும் எந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல முல்லையின் அக்கா மேற்கொண்டு பேசி காயப்படுத்துகிறார்.
முல்லையின் அக்கா கொடுக்கும் பணத்தையும் கதிர் வாங்க மறுக்கிறார் ஐந்து லட்சம் பணத்தை திருப்பிக் கொடுத்த பிறகு மீண்டும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் கதிர் முல்லை இருவரும் சேர்ந்து வாழ விரும்புகின்றனர் இதனை புரிந்து கொள்ளாமல் முல்லையின் அக்கா மற்றும் அம்மா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கதிர் உடைய கடையின் திறப்பு விழாவிற்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள் ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய கதிர் மீது மூர்த்தி,தனம் உள்ளிட்டவர்கள் அனைவரும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். இருந்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் போய்விடலாம் என போக மூர்த்தி முதலில் யாருக்கும் தெரியாமல் ஒரு குழந்தையிடம் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கி வரச் சொல்லி வியாபாரத்தை தொடங்கி வைக்கிறார்.
இது கதிருக்கு தெரிய மகிழ்ச்சி அடைகிறார் அதன் பிறகு அந்த குழந்தையிடம் கூடுதல் உணவுகளையும் கொடுத்து வைக்கிறார் அதன் பிறகு மூர்த்தியும் அந்த பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்று கயல் பாப்பா உள்ளிட்டு வரிடம் பகிர்ந்த சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள். நிச்சியம் கதிர் ஹோட்டல் தொழில் மூலம் நல்ல நிலைமைக்கு வருவார் என கதிரை மனதார மூர்த்தி வாழ்த்துகிறார் இப்படி பாசமான நான்கு அண்ணன் தம்பிகள் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வரும் நிலைமை பெரிதும் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.