விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்பொழுது இந்த கதை கதிர், முல்லையை அதிக முக்கியத்துவமாக வைத்து ஓடி கொண்டு இருக்கிறது.
அதாவது தற்பொழுது வீட்டை விட்டு கதிர் வெளியே போனதிலிருந்து நிறைய கஷ்டங்கள் அவமானங்களை சந்தித்திருப்பார்.மேலும் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கும் பலர் இவரை அசிங்கப்படுத்தினார்கள் இதனை தொடர்ந்து ஜீவாகதிரை நினைத்து கண்கலங்கி பல பிரச்சனைகள் அரங்கேறியது.
எனவே இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக முல்லை கதிருக்கு கொடுத்த யோசனையினால் சின்ன ஹோட்டல் திறக்கப் போகிறார்கள் அதற்கான கடை வேலைகளை தற்போது தொடங்கியுள்ளார்கள். இப்படிப்பட்ட நிலைகள் தற்பொழுது கடைத் திறப்பு விழாவிற்கு தனம் அண்ணியை நேரில் அழைத்தார்.முல்லையும் கதிரும் தனியாக இருப்பதை மீனா சந்தோஷமாக பார்க்கிறார்.
ஆனால் கதிர் முல்லை குடும்பத்தை இழந்து தனியாக அனாதை போல் நிற்கிறார்கள். இதனைப் பார்த்து மூர்த்தியும் கண் கலங்குகிறார் இந்நிலையில் கடையின் திறப்பு விழாவிற்கு குடும்பத்திலிருந்து செல்வார்களா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதாவது கண்டிப்பாக கதிர் முல்லையின் மீது அதிகம் பாசம் வைத்து உள்ளார்கள்.
எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்கள் யார் யாரிடமும் சொல்லாமல் தனித்தனியாக கதிரின் கடை திறப்பு விழாவிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் மூர்த்தி கதிரை ஆசீர்வாதம் செய்வார் இப்படிப்பட்ட நிலையில் கதிரின் ஹோட்டல் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக காட்டப்பட இருக்கிறது ஏனென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பொதுவாக சின்ன சின்ன விஷயங்கள் கூட மிகவும் பிரம்மாண்டமாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.