மறைமுகமாக கதிரின் ஹோட்டலை தொடங்கி வைத்த மூர்த்தி.. கண்டுபிடித்த முல்லையின் அப்பா.! விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்..

pantiyan-stores
pantiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக விறுவிறுப்பான காட்சிகளுடன் எபிசோடுகளை ஒளிபரப்பி வருகிறது.

அந்த வகையில் கூட்டு குடும்பம் என்ற ஒன்றை மறந்து அனைவரும் வாழ்ந்து வருகிறோம் எனவே கூட்டு குடும்பம் என்றால் எப்படி இருக்கும் எவ்வளவு பிரச்சனை, எப்படி எல்லாம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் முல்லையின் மருத்துவச் செலவிற்காக கதிர் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கிவுள்ள நிலையில் அதனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்பதற்காக ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார் கதிர் ஆனால் அனைவருக்கும் இவர் ஹோட்டலில் வேலை பார்ப்பது தெரியவந்த நிலையில் பல பிரச்சனைகள் அரங்கேறியது எனவே அந்த வேலையில் இருந்து கதிர் நின்றார்.

பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வந்த நிலையில் முல்லை கதிருக்கு சூப்பரான ஐடியா ஒன்றை கொடுத்தார் அதாவது இருக்கும் பணத்தை வைத்து புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்கலாம் எனக் கூற தற்பொழுது ஹோட்டல் ஆரம்பித்துள்ளார்கள். சுண்ணாம்பு போன்றவற்றை அடித்து கடையாக உருவாக்கியுள்ள நிலைகள் இன்று வெளியாகியுள்ள எபிசோடில் கதிர் கடையின் திறப்பு விழா நடைபெறுகிறது

இதில் முல்லையின் அம்மா, அப்பா உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டு பால் காய்ச்சிகிறார்கள் இதனை தெரிந்து கொண்ட மூர்த்தி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து மரத்தின் அடியில் நிற்கிறார்  பால் காய்ச்சியுடன் அவர்கள் நல்லா இருக்க வேண்டும் என மனதிற்குள் நிற்கிறார்.

பிறகு கதிர் தன்னுடைய முதல் வியாபாரம் அண்ணனாக இருக்க வேண்டும் என நினைக்க அந்த நேரத்தில் மூர்த்தி பக்கத்தில் விளையாண்டு கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்கி வருமாறு கூற அந்த குழந்தையும் வாங்கிக் கொண்டு ஓடுகிறது மூர்த்தியிடம் அந்த பொருட்களை தர இதனை முல்லையின் அப்பா பார்த்து கதிரை கூப்பிடுகிறார் பிறகு தள்ளி நின்றே மூர்த்தியும் கதிரும் தங்களது பாசத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் ‌‌