சரியாக வேலை செய்யாமல் கஸ்டமர்களிடம் திட்டு வாங்கும் மீனா.! எனது வீட்டிற்கு வரதே என தனது அக்காவை கூறிய முல்லை..

pantiyan-stores
pantiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்பொழுது இந்த சீரியலில் கதிர் வீட்டை விட்டு சென்றதால் யார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை பார்ப்பது என்ற போட்டிகள் நடந்து வருகிறது.

ஏனென்றால் மூர்த்தியால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடைக்குப் போக முடியவில்லை என்பதனால் ஜீவா மட்டும் வேலை பார்த்து வந்தார் பிறகு ஜீவாவுக்கு உதவுவதற்காக தனமும் சென்ற நிலையில் வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா மற்றும் மீனா இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் இதனால் வீட்டில் நிம்மதியே இல்லை என மூர்த்தி சொன்ன நிலையில் மீனா இதற்கு மேல் நானே கடைக்கு போறேன் என கூறுகிறார்.

தினமும் அனுப்பி வைத்துள்ள நிலையில் அங்கு போன மீனாவிற்கு சரியாக பில் போட தெரியவில்லை மேலும் எந்த பொருள் எங்கு இருக்கிறது? எப்படி பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும் என தெரியவில்லை மேலும் மீனாவிற்கு சரியாக பில் போடத் தெரியாமல் ரொம்ப நேரம் ஒருவரை காக்க வைத்ததால் உனக்கு பில் போட தெரியவில்லை என்றால் நான் என்ன ஒரு நாள் ஃபுல்லா இங்கே நிற்கிறதா என கேட்கிறார்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் மூர்த்தி வீட்டில் தனத்திடம் ஜீவாவிடம் போன் போட்டு பேசு என கூறுகிறார் மேலும் கடை விஷயம் உங்களுக்கு எல்லாம் சாதாரணமா போயிடுச்சு என கூறி வருத்தப்படுகிறார். இது ஒரு பக்கம் இருக்க முல்லையின் வீட்டிற்கு அவருடைய அம்மா,அப்பா மற்றும் அக்கா ஆகியவர்கள் வருகிறார்கள்.

அப்பொழுது முல்லையின் அக்கா எந்த மாதிரி ஹோட்டல் வைக்கப் போறீங்க என கேட்டதற்கு முல்லை எங்க தகுதிக்கேத்த மாதிரி சின்ன ஹோட்டல் தான் ஒண்ணும் பெருசு இல்ல என கூற அதற்கு அவருடைய அக்கா பின்ன என்ன பைவ் ஸ்டார் ஹோட்டல்ல வைப்பீங்க என்ன கூறி சிரிக்கிறார் இதனால் கோபமடைகிறார்.

பிறகுகதிர் வந்தவுடன் நான் வேணா உங்களுக்கு ஏதாவது வாங்கி வரவா என கூறுகிறார் அதெல்லாம் வேண்டாம் என முல்லையின் அப்பா கூறிவிட்டு முள்ளை செய்திருக்கும் சாப்பாட்டை சாப்பிடுகிறார். இருக்கிறத வச்சு சீக்கிரமா செஞ்சாலும் உன் சாப்பாடு ஒரு ருசி தான்மா என கூறிவிட்டு சாப்பிடுகிறார். தொடர்ந்து முல்லையின் அக்கா நக்கலாக பேசி வந்ததால் இதற்கு மேல் எங்க வீட்டுக்கு தயவு செஞ்சு வராத என கூறிவிடுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிவடைகிறது.