விஜய் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் ஒரு கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தையும் அதில் வரும் பிரச்சனைகளையும் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த நாடகத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நாடகத்தை விரும்பி பார்த்து வருகின்றனர்.
நாடகத்தில் ஏதோ சில பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் நாடகமே பிரச்சினையாக இருந்தால் என்ன செய்வது இப்படித்தான் இந்த நாடகம் ஒரு சில கால கட்டத்தில் போய்க் கொண்டிருந்தது.
நாடகத்தின் முற்பகுதியில் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக வாழ்ந்தனர் எப்போது ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொண்டாரோ அப்போவே அனைவரும் தனித்தனியாக பிரிய ஆரம்பித்து விட்டனர், இது நிஜ வாழ்க்கையில் ஸஎப்பொழுதும் நடக்கும் ஒரு விஷயமே ஆகும்.
குடும்பத்தில் முக்கிய ஆணிவேராக இருந்து வந்த மூர்த்தி மற்றும் தனம் இருவரும் அக்குடும்பத்தில் உள்ள மற்றவர்களின் மூலம் நிறைய கஷ்டங்களை அனுபவித்தனர், தற்பொழுது ஏதோ அவரவரையும் அவரவர் போக்கில் விட்ட பின் இவர்கள் இருவரும் சற்று நிம்மதியாக உள்ளனர்.
ஏனென்றால் இவர்கள் பட்ட கஷ்டம் அப்படி என்று கூறலாம். விஜய் தொலைக்காட்சி அவ்வப்போது இந்த நாடகத்தின் ப்ரோமோ மற்றும் குறிய அளவிலான வீடியோவை ட்விட்டரிலும் யூடியூபில் பதிவிட்டு வரும், இதேபோல் இன்று இந்த நாடகத்தின் ப்ரோமோ வெளியானது.
இந்த நாடகத்தின் ப்ரோமோவில் மெஸ் அமைப்பதற்காக இடத்தை வாடகைக்கு கேட்க செல்கிறார் அங்கு ஓனர் வாடகை 5000 அட்வான்ஸ் 40,000 தம்பி என்று கூறுகிறார் உடனே அருகில் இருந்த கதிரின் நண்பன், பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி அண்ணனோட தம்பி தான்ன இவன் என்று கூறுகிறார். அதைக் கேட்ட ஓனர் மூர்த்திக்கு கால் செய்து உங்கள் தம்பி இங்கே இருக்கிறார் என்று கூறுகிறார், கொஞ்சம் பார்த்து விலையை கம்மி பண்ணி கொடுங்கள் என்று கூறுகிறார் மூர்த்தி.
மறுநாள் கதிர் தன்னுடைய மனைவி முல்லையுடன் வாடைக்கு வாங்கிய இடத்தை பார்க்க செல்கிறார் அங்கு நீங்கள் மூர்த்தியின் அண்ணன் என்பதால் பத்தாயிரம் கம்மி பண்ணி அட்வான்ஸ் முப்பதாயிரம் கொடுத்துடுங்க என்று ஓனர் கூறுகிறார், அதன் பிறகு பணத்தை ஓனரிடம் ஒப்படைத்து எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்று முல்லையின் அப்பா கூறுகிறார். இத்துடன் ப்ரோமோவும் முடிவடைந்தது.