விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மிகவும் விறுவிறுப்பாக பல திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர் ஹோட்டலில் வேலை பார்த்து வந்ததை அவரின் மாமனார் மற்றும் மாமியாருக்கு தெரியவந்துள்ள நிலையில் முல்லையின் அப்பா கதிர் ஹோட்டலில் வேலை பார்ப்பதை முல்லையிடம் கூறிவிடுகிறார்.
அதிர்ச்சியில் இருந்து வரும் முல்லை மிகவும் வருத்தத்தில் இருந்து வருகிறார். இதனை தொடர்ந்து மேலும் முல்லையின் அம்மா பார்வதி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு சென்று அங்குள்ள அனைவரிடமும் நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்க என சாபம் கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் பார்வதி மறுநாள் கதிரை ஹோட்டலில் வேலை பார்க்க வேண்டாம் வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என வற்புறுத்தி வருகிறார்.
ஆனால் கதிர் இந்த வேலையை விடுவதற்கு மறுக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் முதலாளி அங்க என்ன வெட்டி கதை பேசுற என கதிரை திட்ட இதனை பார்த்த பார்வதி உன் வேலை ஒன்னும் வேணாம் என்ன முதலாளியை திட்டுகிறார். இதன் காரணமாக கதிரை தற்பொழுது வரையிலும் வேலை பார்ப்பதற்கான சம்பளத்தை கொடுத்துவிட்டு வேலையை விட்டு நின்று விடு என கூறிவிட்டார்.
தற்பொழுது வேலை பறிபோய் உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கதிர் குழப்பத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் கயல் பாப்பாவை அழைத்துக் கொண்டு முல்லையின் வீட்டிற்கு செல்கிறார் ஆனால் அங்கு குழந்தையை காணும் என்று தனம் மற்றும் மீனா இருவரும் பதறிப் போய் தேடி வருகிறார்கள்.
அதன் பிறகு கண்ணன் முல்லை அண்ணி வீட்டுக்கு தான் கதிரை அழைத்துச் சென்றேன் என கூறுகிறார் உடனே மீனா கோபமடைந்து கண்ணனை திட்டுகிறார் அப்புறம் கதிருக்கு வேலை போன விஷயம் முல்லைக்கு தெரிய வருகிறது. இதன் காரணமாக புதிய தொழிலை ஆரம்பிக்கலாம் என முல்லை யோசிக்கிறார்.
இவ்வாறு கதிரும் அடுத்தது என்ன வேலை செய்யலாம் என்று யோசித்து வந்த நிலையில் மளிகை கடை ஆரம்பித்தால் தனது அண்ணன் கடைக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வேறு தொழில் செய்யலாம் என யோசிக்கிறார். மேலும் இவர்கள் டோட்டல் ஆரம்பிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.