50 ஆயிரம் பணம் கேட்டு மூர்த்தி, தனத்தை தொந்தரவு செய்யும் ஐஸ்வர்யா.! இக்கட்டான சூழ்நிலையில் இது தேவைதானா என கோபப்படும் மீனா..

pantiyan-stores
pantiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான் அண்ணன் தம்பிகள் தங்களது மனைவியுடன் கூட்டுக் குடும்பமாக மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் பலரின் சூழ்ச்சியினால் தற்பொழுது குடும்பமே பிரிந்து சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றது.

கதிர் தற்பொழுது குடும்பத்திலிருந்து பிரிந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ள நிலையில் ஹோட்டலில் யாருக்கும் தெரியாமல் வேலை பார்த்து வந்தார் ஆனால் தற்பொழுது முல்லை உட்பட அனைவருக்கும் கதிர் ஹோட்டலில் வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் கதிர் வீட்டை விட்டு வெளியேறியதாலும், மூர்த்திக்கு உடல்நிலை சரியில்லை என்பதனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட் தனியாக ஜீவா மட்டும் பார்த்து வந்தார்.

எனவே ஜீவா தனியாக கஷ்டப்படுவதை பார்த்த தனம் சமீப காலங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் தன்னால் முடிந்தவற்றை செய்து வருகிறார். மேலும் தற்பொழுது கடன் உள்ள நிலையில் மிகவும் சிக்கனமாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் ஜீவாவை இவர்களிடமிருந்து பிடிக்க வேண்டும் என்பதற்காக மீனாவின் அப்பா என்னால் தனியாக இந்த கடையினை பார்த்துக்கொள்ள முடியவில்லை இனிமேல் நீங்களே என்னுடைய சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற ஜீவா அண்ணி தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறார் என்னால் அவரை தனியாக விட்டு விட்டு வர முடியாது என்று கூறி விடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கண்ணனுக்கு வேலை கிடைப்பதற்காக 50 ஆயிரம் பணம் தேவைப்படுவதால் கண்ணன் இதனை பற்றி வீட்டில் கூறுகிறார் அதற்கு மீனா குடும்பம் இருக்கனவே இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது இந்த நேரத்தில் இதெல்லாம் தேவைதானா எனக் கூறுகிறார் இதனால் ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கிடையே சண்டை ஏற்படுகிறது.

பிறகு தனம் உங்களால் வீட்டில் நிம்மதியா இருக்க மாட்டேங்குது என்று கூற எப்படியாவது 50 ஆயிரம் பணத்தை கண்ணனுக்கு கட்டிவிடலாம் என கூறுகிறார். இந்நிலையில் அடுத்த நாள் எழுந்தவுடன் ஐஸ்வர்யா அனைவரும் உட்கார்ந்திருக்கும் நேரத்தில் 50 ஆயிரம் பணம் ரெடி பண்ணிட்டீங்களா என கேட்கிறார்.

அதற்கு மூர்த்தி இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு இல்ல ரெடி செஞ்சிடலாம் எனக் கூற தனமும் கண்டிப்பாக பணம் தருகிறேன் என கூறுகிறார். இவ்வாறு பணம் இல்லாத நேரத்தில் இவ்வாறு ஐஸ்வர்யா பணம் கேட்டு தொந்தரவு செய்வது குடும்பத்தினர்களை வருத்தத்தில் வாழ்த்துகிறது. மேலும் மீனா ஜீவாவிடம் இதுபோல் நான் கேட்டிருந்தான் என்னை எவ்வளவு சண்டை போட்டு இருப்ப இப்ப ஏன் ஏதும் பேச மாட்டேங்குற என்று கூறுகிறார்.