உக்கார கூட நேரமில்லாமல் வேலை செய்யும் தனத்தை பார்த்து வருத்தப்படும் அண்ணன்.! முல்லையிடம் போன் பேசியதால் கதிரை கண்டபடி திட்டும் ஓனர்..

pantiyan-stores-13-2
pantiyan-stores-13-2

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது கதிர் வீட்டை விட்டு வெளிவந்த நிலையில் முல்லையிடம் குடோனில் கணக்கு பார்க்கிற வேலை என்று கூறிவிட்டு ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

பெரிதாக ஹோட்டலில் இவர் வேலை செய்யாத காரணத்தினால் திடீரென்று ஒருவரின் மீது தெரியாமல் சாம்பாரை ஊற்றி விடுகிறார். இந்த நபர் ஓனரை அழைத்து சொல்ல கதிரை அந்த ஓனர் திட்டுகிறார். இதனைத் தொடர்ந்து அடிக்கடி போன் பேசுவதால் தொடர்ந்து தவறாக கதிர் வேலை செய்து வருகிறார்.

இதன் காரணமாக ஓனர் கதிரை அழைத்து போன் பேசிகிட்டே வேலை செய்தால் டேபிள் சுத்தமாக இருக்காது போன் பேசுவதை நிறுத்திவிட்டு ஒழுங்காக வேலையை செய் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் முல்லை போன் செய்து மதியம் சாப்பிட வரேன்னு சொன்னிங்க இன்னும் வரலையே என்று கேட்க கதிர் ஓனரிடம் இதனைப் பற்றி சொல்ல அதெல்லாம் வீட்டிற்கு போக வேண்டாம் இங்கேயே சாப்பிடு என்று கூறுகிறார்.

கதிரும் முல்லையிடம் சொல்லிவிட்டு எங்கே சாப்பிடுகிறார். இதனைத் தொடர்ந்து தனம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் வேலை செய்து வருவதை பார்த்த அவருடைய அண்ணன் தனத்திடம் பேசுவதற்காக கடைக்கு வருகிறார். அவரை உட்கார சொல்லிவிட்டு தனம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தனம் உட்காரக்கூட நேரமில்லாமல் வேலை செய்து வருவதால் அவருடைய அண்ணன் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும் வீட்டிலேயே இருக்கலாம் இல்ல என்று கூறுகிறார். அதற்கு தனம் யார் இந்த வேலையெல்லாம் செய்றது வேலை செய்ய முடியலனா கடையை அப்படியே விட்டுட்டு போயிட முடியுமா என்று கேட்கிறார் இதுதான் சமீபத்தில் வந்து வந்த ப்ரோமோவில் தெரிகிறது.