போலீசாரிடம் வசமாக சிக்கிய கண்ணன், ஐஸ்வர்யா.! இவர்களை வைத்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..

serial 1
serial 1

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த நாடகம் முன்பெல்லாம் ஒரு குடும்ப கதையாக,அமைதியாக சென்று கொண்டிருந்தாலும் தற்போது அப்படி இல்லை ஏனென்றால் முல்லையும் கதிரும் செய்யும் ரொமான்ஸ் நாடகத்தை அழகாக மாற்றியுள்ளது. இது ரசிகர்களிடையே ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.

புதிதாக திருமணமான கண்ணன் ஐஸ்வர்யா ஜோடி அவ்வபோது சின்ன சின்ன விஷயங்களை செய்து ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர் ஏனென்றால் இதில் கண்ணனுக்கு ஜோடியாக இருக்கும் ஐஸ்வர்யா முல்லைக்கு போட்டியாக நாமளும் இருக்க வேண்டும், அவர்களை போலவே நாமும் ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று எண்ணி பல்வேறு காரியங்களை செய்து வருகிறார்.

கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கண்ணனை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிடுகிறார்,அங்கே பணம் இல்லாததால் ஜீவாவை வரவைத்து பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்கு நடந்து வருகின்றனர். வரும் வழியில் போலீசை பார்த்த கண்ணன் உடனே ஓட்டம் பிடிக்க அவரை துரத்தி பிடித்த போலீஸ், ஏன் இப்படி ஓடுகிறாய் என்று கேட்க எல்லாம் ஒரு பயம்தான் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

அதன் பிறகு இருவரும் பொலீஸ் ஜீப்பில் வீட்டிற்கு சென்றனர், உங்களை நம்ப முடியாது, உங்களது குடும்பத்தினரை கூப்பிடுங்கள் நான் பேச வேண்டும் என்று கூறுகிறது போலீஸ், அந்த நேரத்தில் ஜீவா திடீரென தன்னுடைய மனைவியுடன் வந்து இவர்களுக்காக போலீசிடம் பேசுகிறார்.

இவர்கள் இளம் ஜோடியாக இருப்பதால் இவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் காமெடியாக உள்ளது. இவர்கள் என்ன செய்ய நினைத்தாலும் முல்லை கதிர் ஜோடி போன்று வர இயலாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.