ப்ரைம் டைமில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்.சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தற்போது முல்லைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்க வாய்ப்பில்லை என மருத்துவர் கூறியதால் செயற்கை முறையில் கருத்தரிக்கும் சிகிச்சைக்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்கள் மேற்கொண்டிருக்கின்றனர். எனவே முல்லைக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பதற்காக மூர்த்தி ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்கிவுள்ளார்.
இவ்வாறு முதல் சிகிச்சை வெற்றி பெற்ற நிலையில் திடீரென்று முல்லைக்கு வயிற்று வலி ஏற்படுகிறது எனவே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பரிசோதனையில் மருத்துவ மேற்கொண்ட சிகிச்சை பயனளிக்கவில்லை இனி கொஞ்ச நாட்கள் கழித்து இந்த சிகிச்சையை பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டார்.
இவ்வாறு கடன் வாங்கிய அந்த 5 லட்சமும் வீணா போய்விட்டது என தன்னம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் எப்படியாவது கருதரித்து விடும் என எண்ணிய அவர்களுக்கு இந்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிவுள்ளது.
எனவே முல்லையும் மனவேதனையில் அழுதுகொண்டே இருக்கிறாள் இருப்பினும் மருத்துவர் கண்டிப்பாக இன்னும் கொஞ்ச நாட்களில் இந்த சிகிச்சையை வெற்றிபெற வைத்துவிடலாம் என்று கூறியதால் தற்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர்கள் கண்டிப்பாக மறுபடியும் முல்லை இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து உள்ளார்கள்.
ஏற்கனவே ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி வீணான நிலையில் மேலும் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்க உள்ளார்கள் எனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினருக்கே மேலும் கடன் மேல் கடன் வந்து சேர இருக்கிறது பிறகு இந்த கதையை வைத்து இன்னும் பல ஆயிரம் எபிசோடுகளை போட்டியிடுவார்கள் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.