விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி இரண்டு சீரியல்களும் மகா சங்கமம் என்ற பெயரில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அதோடு இந்த இரண்டு சீரியல்களும் இணைந்ததால் இதன் மூலம் எப்படியாவது கோபி குடும்பத்தில் சிக்கி கொண்டு ராதிகாவை பிரிவான் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த மகா சங்கமத்தில் கோபியின் அப்பாவிற்கு பிறந்தநாள் நடைபெறும் நிலையில் அதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் பாக்கியலட்சுமி சீரியலுக்கு வந்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் பிறந்தநாளன்று பாக்யாவின் வீட்டிற்கு ராதிகா வருவார் கண்டிப்பாக கோபி சிக்கிக்கொள்வான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோபி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டு எப்படியோ தப்பித்து விட்டான்.
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினருக்கு கோபியின் மீது டவுட்டு இருந்து வந்த நிலையில் ராதிகாவை கோபி மட்டும்தான் நாம் இருவரும் நேரில் சென்று பார்த்து நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் யார் என்று கேட்டதும் ராதிகா கோபியின் போட்டோவை காட்டுகிறாள் அதனை பார்த்து இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.
இதனைப்பற்றி கோபியிடம் மூர்த்திக்கு நிலையில் இருவருக்கும் இடையே பெரும் சண்டை ஏற்படுகிறது. இவ்வாறு இந்த வாரம் முடிந்த நிலையில் அடுத்த வாரம் ப்ரோபோவில் மூர்த்தி,தனம் இருவரும் ராதிகாவை பார்த்து கோபி நல்லவர் இல்லை, உங்களையும் அவரது குடும்பத்தினரையும் சேர்த்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதனை பார்த்து ராதிகா கடும் அதிர்ச்சியில் இருந்து வருகிறாள்.