நடுரோட்டில் ராதிகாவின் கையை பிடித்து பேசும் கோபி.! அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மூர்த்தி.!

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சீரியல்கள் டி ஆர் பியில் சூப்பர்ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இரண்டு சீரியலிலும் குடும்ப சீரியல் ஆக இருப்பதால் ரசிகர்கள் நல்ல ஆதரவைத் தெரிவித்து வந்தார்கள். கடந்த வாரங்களாக இந்த இரண்டு சீரியல்களும் மெகா சங்கமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை தொடர்ந்து விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான கதைகளை எட்டி வருகிறது. பல காலங்களாக தப்பித்து வருகிறார். கோபி இந்த மெகா சங்கமத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினால் மாற்றிக் கொள்வாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த முறை கோபி கண்டிப்பாக மாட்டிக் கொள்வார் என்று கூறப்படுகிறார்கள்.

இந்நிலையில் கோபி அப்பாவின் பிறந்தநாளுக்காக ராதிகா வருகிறார். அப்பொழுது ராதிகா வீட்டின் உள்ளே வரும் போது கோபி பதட்டத்துடன் எனக்கு ஒரு மீட்டிங் இருப்பதாகவும் தனது அறைக்குள் பரபரப்பாக செல்கிறார். இதை குடும்பத்தில் உள்ள அனைவரும் கவனித்து வருகிறார்கள். பொய் சொல்லி அறையில் சென்ற கோபியை எல்லோரும் அழைக்கிறார்கள் எவ்வளவு அழைத்தும் வெளியில் வரவில்லை.

அதன்பிறகு, ராதிகா கிளம்பி சென்றுவிடுகிறார். அதை கோபி திருட்டுத்தனமாக மாடியில் பார்த்துவிட்டு கீழே இறங்கி வருகிறார். அப்போது அந்த நேரத்தில் வெளியில் பால் பாக்கெட் வாங்க போவதற்காக எழில் கிளம்புகிறார். அதனை தடுத்து கோபி அவரே வாங்கி வருவதாக கூறுகிறார். பால் பாக்கெட் வாங்குவதற்காக செல்கிறார். கோபி இந்த செயல் ராதிகாவை பார்ப்பதற்கு தானே என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து ராதிகாவும் கோபிக்கு போன் செய்து சந்திப்பதற்காக வர வைக்கிறார். அப்போது ராதிகாவின் கையை பிடித்து பேசிக்கொண்டிருப்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி பார்த்துவிடுகிறார். இனிமேல் கோபி தப்பிக்க வழியே இல்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதனையடுத்து எல்லா உண்மையும் வீட்டில் மூர்த்தி சொல்வாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.