5 லட்ச ரூபாய் கடனை அடைப்பதற்காக இப்படி ஒரு வேலையா செய்வது.! கதிரின் நிலமை இப்படியாகிவிட்டதே.!

kathir-mullai
kathir-mullai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.நான்கு கண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து வரும் இந்த சீரியல் தொடர்ந்தும் முன்னணி வகித்து வருகிறது. தற்போதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்பதை மறந்து வாழ்ந்து வருகிறோம் எனவே கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் பிரச்சனை, சந்தோஷம் என எல்லாவற்றையும் அனைவருக்கும் தெரிய வைக்கும் வகையிலும் நாடகம் விளங்குகிறது.

இவ்வாறு தற்பொழுது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரே இடத்தில் ஒன்று கூட மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு தற்போது சுக்குநூறாக உடைந்துள்ளது.

அதாவது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இயற்கையாக கிடைக்காது என்ற காரணத்தினால் செயற்கை முறையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர் கூட ஆனால் அந்த மருத்துவ செலவிற்கு 5 லட்சம் ஆகும் எனக் கூறினார்கள். இவ்வாறு ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து முல்லைக்கு ரீட்மென்ட் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் 5 ரூபாயை மீண்டும் மீனாவின் அப்பா கேட்க உடனே தனம் தனது கையில் போட்டிருந்த வளையலை கழட்டி ஜீவாவிடம் கொடுத்து விட்டு வா என்று கூறுகிறார். உடனே தனத்தின் அம்மா அந்த வகையில விற்கக்கூடாது என்று கோபமடைகிறார்.

இவ்வாறு பிரச்சனை ஆரம்பிக்க கதிர் உடனே என்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் எப்படியாவது நான் ஐந்து லட்ச ரூபாயை மீண்டும் தந்துவிடுவேன் எனக்கு கொஞ்ச நாட்கள் டைம் கொடுங்க என்று கூறிவிட்டு முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் கதிர் எப்படியாவது இந்த கடனை அடைத்துவிட வேண்டும் என்பதற்காக கட்டிட வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இந்த எபிசோடு வெளியாக இருக்கிறது கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் கதிரின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.