மருத்துவமனையில் சண்டை போட்டுக் கொண்ட மீனாவின் அப்பா மற்றும் தனத்தின் அண்ணி.! மயங்கி விழுந்த தனம்..

pantiyan-stores-18
pantiyan-stores-18

வெள்ளித்திரை எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளதோ அதேபோல் சின்னத்திரைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  இவ்வாறு சின்னத்திரை தொடர்ந்து ஏராளமான ஷோக்கள் மற்றும் சீரியல்களை புதிதாக அறிமுகப்படுத்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் தொலைக்காட்சிதான் விஜய் டிவி.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நம்பர்-1 தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் எதிர்பார்க்காத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது  நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினையும்,தனது கணவனின் தம்பிகளை தனது மகன்களாக அண்ணியின் பாசத்தினையும், மருமகள்களின் ஒற்றுமையையும் மையமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவைக் கொடுத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தினால் மூர்த்தி தனக்கு தெரிந்த சிலரிடம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி செயற்கை முறையிலாவது முல்லைக்கு குழந்தை பாக்கியத்தைப் பெற்று தந்து விட வேண்டும் என்று நினைத்து கடன் வாங்கினார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ள நிலையில் கதிர் தனது மாமனார் வீடான உள்ளே வீட்டில் தங்கி வருகிறார்.  அடிபட்ட நிலையில் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை தெரிந்து கொண்டு  மருத்துவமனைக்கு செல்கிறார்.

மருத்துவமனைக்குப் போயிம் மீனாவின் அப்பா மற்றும் தனத்தின் அம்மா,  அண்ணி இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்படுகிறது.உடனே தனம் ஒருவருக்கு உள்ளே ஆபரேஷன் நடந்துட்டு இருக்கு அதனால என்னாகுமோ ஏதாகுமோ பயத்தில் இருக்க இங்கே வந்து இப்படி பிரச்சனை பண்றிங்க யாரு உங்களை வரச்சொன்னது என்று பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து விடுகிறார்.  இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.