விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.நான்கு கண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து வரும் இந்த சீரியல் தொடர்ந்தும் முன்னணி வகித்து வருகிறது. தற்போதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்பதை மறந்து வாழ்ந்து வருகிறோம் எனவே கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் பிரச்சனை, சந்தோஷம் என எல்லாவற்றையும் அனைவருக்கும் தெரிய வைக்கும் வகையிலும் நாடகம் விளங்குகிறது.
இவ்வாறு தற்பொழுது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரே இடத்தில் ஒன்று கூட மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு தற்போது சுக்குநூறாக உடைந்துள்ளது.
அதாவது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இயற்கையாக கிடைக்காது என்ற காரணத்தினால் செயற்கை முறையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர் கூறஆனால் மருத்துவ செலவிற்கு 5 லட்சம் ஆகும் எனக் கூறினார்கள். இவ்வாறு ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து முல்லைக்கு ரீட்மென்ட் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடனுக்காக இவ்வளவு பெரிய பிரச்சனை ஏற்பட்டதால் கதிர் உடனே என்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் எப்படியாவது நான் ஐந்து லட்ச ரூபாயை மீண்டும் தந்துவிடுவேன் எனக்கு கொஞ்ச நாட்கள் டைம் கொடுங்க என்று கூறிவிட்டு முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
தற்பொழுது கதிர் முல்லையின் அம்மா வீட்டில் இருந்து வருகிறார்கள்.திடீரென்று மூர்த்திக்கு என் நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிறகு டாக்டர் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் இதயத்தில் இரண்டு ஹோல் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுதான் முதல் அட்டாக் நெருக்கமாய் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும் என மருத்துவர் கூற உடனே கதிர் மூர்த்தியை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது தனம் கதிரிடம் நீ போய் மாமாகிட்ட நான் வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொன்னீனா சரியாகிவிடுவாரு என்று கூற அதை என்னால் மாற்ற முடியாது நான் முன்பு என்ன சொன்னேனோ அதே தான் என்று கூறுகிறார்.
உடனே கோபமடைந்த தனம் ஜீவாவிடம் அவன இங்க இருந்து போக சொல்லு எதுக்கு இங்க வந்தான் என்று கத்துகிறார். இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.