விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து வரும் இந்த சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. தற்போதெல்லாம் கூட்டுக் குடும்பம் என்பதை மறந்து வாழ்ந்து வருகிறோம் எனவே கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும் பிரச்சனை, சந்தோஷம் என எல்லாவற்றையும் அனைவருக்கும் தெரிய வைக்கும் வகையிலும் நாடகம் விளங்குகிறது.
இவ்வாறு தற்பொழுது உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த நாடகமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் திகழ்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ஒரே இடத்தில் ஒன்று கூட மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு தற்போது சுக்குநூறாக உடைந்துள்ளது.
அதாவது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இயற்கையாக கிடைக்காது என்ற காரணத்தினால் செயற்கை முறையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என மருத்துவர் கூட ஆனால் அந்த மருத்துவ செலவிற்கு 5 லட்சம் ஆகும் எனக் கூறினார்கள். இவ்வாறு ஐந்து லட்ச ரூபாய் செலவு செய்து முல்லைக்கு ரீட்மென்ட் செய்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் 5 ரூபாயை மீண்டும் மீனாவின் அப்பா கேட்க உடனே தனம் தனது கையில் போட்டிருந்த வளையலை கழட்டி ஜீவாவிடம் கொடுத்து வித்துட்டு வா என்று கூறுகிறார். உடனே தனத்தின் அம்மா அந்த வளையலை விற்கக்கூடாது என்று கோபமடைகிறார்.
இவ்வாறு பிரச்சனை ஆரம்பிக்க கதிர் உடனே என்னால் தான் இவ்வளவு பிரச்சினையும் எப்படியாவது நான் ஐந்து லட்ச ரூபாயை மீண்டும் தந்துவிடுவேன் எனக்கு கொஞ்ச நாட்கள் டைம் கொடுங்க என்று கூறிவிட்டு முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். டாக்டர் அவருக்கு இதயத்தில் இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பதாகவும் விரைவில் அவருக்கு ஆபரேஷன் செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார் என்றும் கூறிவிட்டார்கள்.
பிறகு தனம் எவ்வளவு பணம் வந்தாலும் பரவாயில்லை ஆப்பரேஷன் செய்ய ரெடி பண்ணுங்க என்று கூற உடனடியாக 2 லட்சம் ரூபாய் பணத்தை கட்டுங்கள் என டாக்டர் கூறுகிறார். தற்போது பணத்திற்கு என்ன பண்ணுவது என்று தெரியாமல் அனைவரும் திக்குமுக்காடி வருகிறது.