மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை கதிரிடம் கூற போன் போட்ட கண்ணன்.! முல்லையின் அம்மா செய்த காரியம்..

pantiyan-stores-serial
pantiyan-stores-serial

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். சமீபகாலங்களாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஏராளமான திருப்பங்கள் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் இந்த சீரியல் புகழின் உச்சத்தில் இருந்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது கூட்டுக்குடும்பம் என்பதையே மறந்து வாழ்ந்து வருகிறோம்.

அதனை நினைவு படுத்தும் வகையில் நான் அண்ணன் தான் தம்பிகளின் உறவினையும், தனது கணவனின் தம்பிகளை தனது மகன்களாக பார்த்துக்கொள்ளும் அண்ணியின் பாசத்தையும், மருமகள்களின் ஒற்றுமையையும் உன்னத பூர்வமாக வெளிப்படுத்தும் ஒரு சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் விளங்குகிறது.

இப்படிப்பட்ட நிலையில் மீனாவின் அப்பா எப்படியாவது ஜீவாவை அந்த வீட்டிலிருந்து பிரிக்க வேண்டும் என்பதற்கு பல திட்டங்களைப் போட்டு வந்தார் இருந்தாலும் ஜீவா தனது குடும்பத்தை விட்டு வெளியேறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் ட்ரீட்மென்ட்டுகாக ரூபாய் 5 லட்சம் கடன் வாங்க பட்டிருந்த நிலையில் கடன்காரன் கேட்டதும் மீனாவிடம் ஜீவா அந்த ஐந்து லட்ச ரூபாயை கேட்க அதனை தெரிந்து கொண்ட மீனாவின் அப்பா சண்டை ஏற்படும்படி பேசி தற்பொழுது கதிர் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சுக்குநூறாக உடைந்து இருப்பதால் அனைவரும் மன வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள்.

இதனை கதிரிடம் கூற வேண்டும் என்பதற்காக ஜீவா மற்றும் கண்ணன் போன் போட முல்லையின் அம்மா எடுக்காமல் கட் செய்து வருகிறார். பிறகு கண்ணன் நேரடியாக முல்லை என் வீட்டிற்கே வந்து கதிரிடம் கூற பதறி அடித்துக்கொண்டு கதிரும் முல்லையும் மருத்துவமனைக்கு செல்கின்றனர்.