விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கூட்டு குடும்பத்தை பற்றி அனைவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
சீரியலுக்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது மேலும் டிஆர்பி-லிம் முன்னணி வசித்து வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது கதிர் 5 லட்சம் ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தனம் தனது நகையை அடகு வைத்துவிட்டு மீனா அப்பாவிடம் மருத்துவ செலவிற்காக வாங்கிய அனைத்து கடன்களையும் அடைத்துவிட்டார். மேலும் வழியில் முல்லை மற்றும் கதிரை பார்த்த ஜீவா தனம் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுக்கு தேவையான சிலவற்றை வாங்கி தந்து விட்டு வந்தார்கள்.
பிறகு தனம் வீட்டிற்கு வந்ததும் மூர்த்தி ஏன் நகையை அடகு வச்ச என்று கேட்க கடன அடைச்சிடலாம்னு இப்படி செஞ்சேன் என்று கூறுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது கதிர் புதிய வேலைக்கு செல்கிறார்.
முல்லையிடம் குடோனில் கணக்கு போடுற வேலை என்றும் எளிமையான வேலை தான் கஷ்டம் இல்ல என்று கூறிவிட்டு ஹோட்டலில் சமைக்கும் வேலைக்கு செல்கிறார். ஹோட்டலுக்கு சென்றதும் ஹோட்டல் முதலாளி வேலை செய்யும் ஒருவரை அழைத்து இவருக்கான வேலையை கொடு என்று கூற சமையலறையில் காய் வெட்டு வேலையை செய்கிறார் கதிர்.
இதனைத் தொடர்ந்து தனம், ஐஸ்வர்யா, கண்ணன், ஜீவா என அனைவரும் தங்களது பாண்டியன் ஸ்டோர்ஸ்சில் பணியாற்றும் வேலையை ஆரம்பித்துள்ளார்கள் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.