விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்கள் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒன்றாக எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த நான்கு அண்ணன் தம்பிகளும் பணப்பிரச்சினையினால் தற்பொழுது பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதாவது மூன்றாவது தம்பியாக இருந்து வந்த கதிர் வீட்டை விட்டு வெளிவந்து வாடகைக்கு இருந்து வருகிறார்.மேலும் முல்லை மருத்துவ செலவிற்கு வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் கடனை எப்படியாவது அடைக்க வேண்டும் என்று முடிவில் இருந்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து மூர்த்தியின் மருத்துவ செலவிற்காக மீனாவின் அப்பாவிடம் வாங்கிய பணத்தை மீண்டும் தனம் மற்றும் ஜீவா இருவரும் சென்று கொடுத்துவிட்டார்கள். அதற்கு ஜகார்த்தனன் இவர்களும் மீனாவிற்கு எதுவும் செய்ய மாட்டாங்க நம்மளையும் எதுவும் செய்ய விட மாட்டாங்க என்று கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் ரோட்டில் முல்லை மற்றும் கதிரை இருவரும் ஜீவா, தனம் பார்க்கிறார்கள். பிறகு கதிரின் வீட்டிற்கு சென்ற இவர்கள் வெளியில் நின்று விட்டு அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார்கள்.
இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலை ஒரு பக்கம் மீனா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டிலிருந்து வருகிறார்கள். அவப்பொழுது மீனா ஐஸ்வர்யாவிடம் கண்ணன் ஒழுங்கா படிச்சு இருந்தா படிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சு வெச்சி இருப்போம் என்று கூற அப்ப நான் படிக்கவில்லை என்று கூறுகிறீர்களா என்று ஐஸ்வர்யா கேட்கிறார்.
இவ்வாறு இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனையாக மாறுகிறது. இவ்வாறு போவதை பார்த்தால் அடுத்தது ஐஸ்வர்யா மற்றும் மீனாவிற்கு இடையே தான் பிரச்சனை ஏற்படும் என்று தெரிய வருகிறது.
Cha… சண்டை பெருசா போகும்னு எதிர்பார்த்தேன்.. 😆😜
பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PandianStores #VIjayTelevision pic.twitter.com/zom2AWUO8C
— Vijay Television (@vijaytelevision) July 2, 2022