விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இன்று தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கதிர் வெளியேறி உள்ள நிலையில் தற்பொழுது ஜீவாவையும் இந்த குடும்பத்தில் இருந்து பிரிப்பதற்காக மீனாவின் அப்பா திட்டம் போட்டு வருகிறார்.
இந்த வகையில் ஜீவாப்பை சந்தித்த இவர் எனக்கு உடல்நிலை சரியில்லை மிகவும் கஷ்டமாக இருக்கிறது சூப்பர் மார்க்கெட்டை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எனக் கூற ஏற்கனவே கதிர் இல்லை அண்ணி மட்டும் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் நானும் வந்துவிட்டால் அவர்களுக்கு யார் உதவி செய்வார் என கேட்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருப்பது முல்லையின் அப்பா அம்மாவிற்கு தெரிய வந்துள்ள நிலையில் மூர்த்தியை சந்தித்து முல்லையின் அம்மா நீங்க எல்லாம் நல்லா இருக்கவே மாட்டீங்க நான் சாபம் கொடுத்துள்ளார் அதன் பிறகு முல்லைக்கும் கதிர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.
இப்படிப்பட்ட நிலையை கண்ணன் வேலைக்கு சேர வேண்டும் என்பதற்காக 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மீனா இவ்வளவு பிரச்சனை குடும்பத்தில் இருக்கும் பொழுது இவ்வளவு பணம் கட்டி தான் ஆக வேண்டுமா என பேசி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இதன் காரணமாக மீனா மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
இதனைப் பார்த்த தனம் வீட்டிற்கு வந்தால் நிம்மதியா இருக்க மாட்டேங்குது எப்பவும் சண்டை தான் கண்ணனுக்கு பணம் கட்டி தான் ஆக வேண்டும் என சொல்லிவிட்டேன். எனக் கூற பிறகு மீனா எப்பொழுதும் அவளுக்கே சப்போர்ட் பண்ணுங்க எனக் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார். ஐஸ்வர்யா தனத்திடம் உங்களிடம் அவர் நல்லா தான் பேசுறாங்க என்னிடம் மட்டும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என கூறுகிறார்.
இந்நிலையில் முல்லையின் அக்கா என்ட்ரி கொடுத்துள்ளார் அவர் முல்லையின் வீட்டிற்கு சென்று உன் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை உனக்கு ஏதாவது பண உதவி இருந்தால் என்னிடம் கூறு நான் தருகிறேன் என கேட்கிறார். அதற்கு முல்லை எனக்கு எதுவும் வேண்டாம் எனக் கூறுகிறார் பிறகு மூர்த்தியின் வீட்டிற்கு சென்ற இவர் எப்படி இருக்கீங்க என்று கேட்க நான் நல்லாதான் என மூர்த்தி என கூறுகிறார் இவ்வாறு திடீரென்று இவர் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில் அடுத்தது என்ன பிரச்சனை என இதற்கு மேல் தெரிய வரும்.
இதனைத் தொடர்ந்து தனம் வெளியில் போகும் பொழுது இளநீர் குடிப்பதற்காக இறங்குகிறார் அப்பொழுது அந்தக் கடைக்காரர் சில்லர வேண்டும் என கேட்க அங்கு இருந்து கதிர் வந்து பணத்தை தருகிறார் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.