விஜய் டிவியில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது பணம் பிரச்சனையினால் கதிர் வீட்டை விட்டு வெளியேறி முல்லையுடன் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். பிறகு எப்படியாவது ஐந்து லட்சம் ரூபாய் கடனை அடைத்து விட வேண்டும் என்பதற்காக முல்லையிடம் சூப்பர் மார்க்கெட் குடோனில் கணக்கு பார்க்கிற வேலை என்று பொய் சொல்லிவிட்டு ஹோட்டலில் பணியாற்றி வருகிறார்.
ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சரியாக கதிர் வேலை செய்யாத காரணத்தினால் ஹோட்டல் முதலாளி திட்டுகிறார். அந்த வகையில் ஒருவரின் மீது சாம்பார் ஊத்தி நிலையில் முல்லையிடம் போன் பேசிக்கொண்டே டேபுலை ஒழுங்கா துடைக்காமலும், சரியாக பரிமாறாமல் இருந்து வருவதால் மீண்டும் திட்டு வாங்குகிறார்.
இதனை தொடர்ந்து மற்றொரு பக்கம் தனம் உட்காரக்கூட நேரமில்லாமல் அனைத்து வேலைகளையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் செய்து வருகிறார். தனது மகனை வைத்துக் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்ய ஜீவா நான் பார்த்துக் கொள்கிறேன் அண்ணி என்று கூறினாலும் மற்ற வேலையை பார் என்று கூறுகிறார்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் கதிர் வீட்டிற்கு மிகவும் லேட்டாக வருகிறார். உடனே முல்லை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்க கொஞ்சம் வேலை என்று கூறுகிறார். பிறகு கதிர் பையில் வைத்திருந்த துணிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக முல்லை வாங்க கதிர் தராமல் தவிர்க்கிறார்.
பிறகு முல்லை வாங்கி பார்க்கும் பொழுது சட்டை மிகவும் அழுகாக இருக்கிறது. இதனை பார்த்தவுடன் நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் தானே வேலை செய்றீங்க ஏன் இவ்வளவு அழுக்கு என்று கேட்க கதிர் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறார். முல்லை கதிர் ஹோட்டலில் வேலை செய்வதை கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.