விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் ஏராளமான திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது அதிலிருந்து கதிர் பிரிந்துள்ளார். எப்படியாவது முல்லைக்கு ட்ரீட்மென்ட்க்காக வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அளித்து விட வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்து விடுவதோடு மட்டுமல்லாமல் பல முயற்சிகளையும் செய்து வருகிறார்.
எனவே தற்பொழுது வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் முல்லை மற்றும் கதிர் வரும் வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் கதிர் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள குடோனுக்கு கணக்கு எழுதுற வேலை மற்றும் எளியதாக இருக்கும் என முல்லையிடம் பொய் சொல்லிவிட்டு ஹோட்டலில் வேலை செய்து வருகிறார்.
அந்த ஹோட்டலில் சமைக்கிற வேலை பரிமாருற வேலை போன்றவற்றை செய்து வருகிறார். இந்நிலையில் பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் எனக்கு சாம்பார் ஊத்துப்பாய் என்று கூற கதிர் அவசரத்தில் அவரின் சட்டை மேல் சாமாரை ஊற்றி விடுகிறார். கதிர் உடனே மன்னிச்சிடுங்க என்று கூற அதனைக் கேட்காத அவர் கதிரை திட்டி விட்டு ஓனரை கூப்பிடுகிறார்.
ஓனர் வந்து மன்னிச்சிடுங்க இதோ தெரியாம தம்பி தப்பு செஞ்சுட்டாரு என கூறுகிறார். பிறகு கதிரை உனக்கு ஒரு வேலையும் செய்ய தெரியாதா என கடுமையாக திட்டி விட்டு உள்ளே போய் ஏதாவது வேலை இருந்தால் செய்ய என கூறுகிறார். பிறகு கதிரும் கவலையுடன் அந்த இடத்திலிருந்து உள்ளே செல்கிறார்.