விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் இடம் பெற்று வரும் ஒவ்வொரு எபிசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராத பல திருப்பங்கள் இடம்பெற்று வருகிறது.
தற்பொழுது கதிர் முல்லை டிரீட்மெண்டிற்காக செலவு செய்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை சம்பாதித்து உங்களிடம் கொடுத்துவிட்டு தான் வீட்டிற்கு வருவேன் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பிவிட்டார் இதன் காரணமாக இதனை ஏற்றுக்கொள்ள முடியாத மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தற்போது தான் குணமாகி வீட்டிற்கு வந்துள்ளார்.
பிறகு கதிர் மற்றும் முல்லை இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் கதிர் குடோனில் கணக்கு பார்க்கிற வேலை என்று கூறிவிட்டு ஹோட்டலில் சமைப்பது மற்றும் பரிமாறும் வேலையை செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கண்ணனும் காலேஜ் சென்று விடுவதால் பாண்டியன் ஸ்டோர்ஸ்சை ஜீவா மட்டும் பார்த்து வரும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே மூர்த்தி நானும் கடைக்கு போறேன் ஜீவா மட்டும் கஷ்டப்படுறான் என்று கூற தனம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு எக்ஸெல் வண்டியை எடுத்துக்கொண்டு கடைக்கு செல்கிறார்.
மேலும் கடைக்கு சென்று கணக்கு வழக்குகள் மற்றும் என்னென்ன பொருள் இருக்கிறது என அனைத்து வேலையும் செய்து கொண்டிருக்கிறார். கடையில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் தனம் வேலை செய்வதை பார்த்து பெருமையடைகிறார்கள். இவ்வாறு தனம் தனது குடும்பத்தின் கஷ்ட நிலை மாற வேண்டும் என்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்துள்ளார்.