முல்லைக்காக ஆட்டோ ஓட்டும் அளவிற்கு சென்ற கதிர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலமையா.!

pantiyan stores a
pantiyan stores a

நான்கு அண்ணன் தம்பியின் பாச உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது எனவே டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

தற்போது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னணி வகிக்க வேண்டும் என்பதற்காக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களில் பல டுவிஸ்ட்களை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களிலும் பல டுவிஸ்ட்கள் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது முல்லைக்கு குழந்தை பாக்கியம் இயற்கையாக இருக்காது என்று மருத்துவர்கள் சொன்னதால் செயற்கை முறையில் எப்படியாவது குழந்தை பெறும் பாக்கியத்தை தரவேண்டும் என்பதற்காக குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வீடு கட்டுவதற்கு வைத்திருந்த பணத்தை வைத்து முல்லைக்கு ட்ரீட்மென்ட் செய்து வருகிறார்கள்.

முல்லை கர்ப்பமாக வேண்டும் என்பதற்காக கோவிலுக்கு சென்று பல வேண்டுதல்களை செய்து வந்தார் எனவே தனது உடலை வருத்தி வந்ததால் அனைவரும் தற்போது மிகவும் பாசமாக கவனித்துக் கொண்டு வருகிறார்கள் ஆனால் மீனா மட்டும் எப்படியாவது வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்தார் எனவே தற்போது வீடு கட்டும் வேலையை தள்ளிப் போடுவதால் கொஞ்சம் கோபத்தில் இருந்து வருகிறார்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முல்லையை தாங்கி வரும் நிலையில் தற்போது ஆட்டோவில் கதிர்,முல்லை மற்றும் தனம் மூவரும் செல்கிறார்கள். அப்போது ஆட்டக்காரர் மெதுவாக செல்லாமல் மேடு பள்ளம் என்று பார்க்காமல் ஓடி வருவதால் கதிர் இறங்கி அவரை இறங்கச் சொல்லிவிட்டு ஆட்டோவை ஓட்டுகிறான்.  எனவே கதிரின் பாசம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது இன்று இந்த காட்சிகள் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.