விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் பாண்டியன் ஸ்டோர் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீடு கட்ட வேண்டும் என்று பொதுவாக அனைவரும் முதலில் முடிவெடுக்கிறார்கள். ஆனால் அதன்பிறகு முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்து முல்லைக்கு மருத்துவ ரீதியான ட்ரீட்மெண்ட் வேண்டும் என்பதால் முல்லைக்கு மருத்துவ செலவு பார்க்க வேண்டுமென்று அந்த முடிவை கைவிடுகிறார்கள்.
அதனால் சில பிரச்சினைகள் குடும்பத்தில் ஏற்படுகிறது. மருத்துவ செலவு செய்ய வேண்டும் என்று ஏதோ வாய் வார்த்தையில் அப்படி சொல்லியிருப்பார்கள் என்று நினைத்தாலும் அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோவில் மூர்த்தி அவர்கள் தனது மனைவி தனத்திடம் 5 லட்சம் பணம் கொடுத்து இதை முல்லையின் மருத்துவ செலவிற்கு பயன்படுத்து என்று கூறுகிறார்.
,அதன்பின் கதிரிடம் நாளை காலை விடிந்தவுடன் முல்லையை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல் என்று கூறுகிறார், மருத்துவமனைக்கு சென்று ட்ரீட்மெண்ட் எடுத்து வீட்டிற்கு வந்த பிறகு அனைவரும் முல்லைக்கு தேவையானவற்றை செய்து பார்த்துக் கொள்கிறார்கள் அதன்பிறகு இதில் ரொமான்டிக்கான ஒரு தருணமும் நிகழ்ந்துள்ளது.
அது என்னவென்றால் முல்லை இரவு தூங்காமல் விழித்திருக்க கதிர் எழுந்து முல்லையிடம் அமைதியாக என்ன ஆயிற்று என்று கேட்கிறார் அதற்கு முல்லை பாத்ரூம் போக வேண்டும் என்று சிறு குழந்தை போல் கூறுகிறார், அதன்பிறகு கதிர் முல்லையை கையோடு அழகாக ஏந்தி முல்லைக்கு பாத்ரூம் செல்வதற்கு உதவி புரிவது போல புரோமோ வெளியானது.
இதனை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இன்னும் என்னென்ன ரொமான்டிக் சீன்கள் இருக்கும் என்று ஆர்வத்துடனும் உள்ளனர்.