புதிய பிரச்சினையை ஏற்படுத்திய ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்.! இனி வரும் எபிசோட்.

pantiyan stores 21
pantiyan stores 21

இளம் ஜோடிகளான ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவருக்கும் பெரிய சண்டை வந்துவிட்டது. இவ்வாறு சின்ன வயதிலேயே படித்துக்கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் சொல்வதைக் கேட்காமல் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்.

எனவே குடும்பத்தில் இருப்பவர்களை அசிங்கப்படுத்தி விட்டு வீட்டை விட்டு ஓடியதால் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக்கொள்ளவில்லை சில பிரச்சனைகலுக்கு பிறகுதான் இருவரையும் தங்களது வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.

இத்தனை நாட்களாக மீனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு சண்டை நடந்து வந்தது ஆனால் சமீபத்தில் சில நாட்களாக இருவரும் ஒற்றுமையாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் காலேஜ் போற வீட்டுக்கு வரது என்று இருந்த கண்ணன், கடைக்கு போறது வீட்டுக்கு வருவதுமாக இருந்த ஐஸ்வர்யா இருவருக்கும் இப்போ ஒரு பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது.

கண்ணன் எதர்ச்சியாக  ஐஸ்வர்யாவிடம்  தண்ணீர் கேட்க நீ போய் எடுத்து குடி சொல்ல,எனக்கு தண்ணீர் கூட தரமாட்ர அப்புறம் எதுக்கு எனக்கு மனைவியா இருக்க என்று கண்ணன் கேட்க சண்டை முற்றி விடுகிறது பிறகு தானம் நிறுத்துங்க என சொல்ல புரோமோ அதோடு முடிகிறது. பொதுவாகவே ஐஸ்வர்யா ஏதாவது பிரச்சனை வரும்படி பேசிக் கொண்டுதான் இருக்கிறாள்.

ஆனால் தற்பொழுது தான் சண்டை மற்ற ஆரம்பித்துள்ளது இதற்குமேல் ஐஸ்வர்யா கண்ணனை அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டோம் என்று நினைத்து வருத்தப்படுவார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இவ்வாறு இவர்கள் இருவரை வைத்தே இனி வரும்  எபிசோடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.