மருத்துவர் கூறிய தகவலால் மகிழ்ச்சியில் இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்.! இனிவரும் எபிசோட்.

mullai 1
mullai 1

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக பல டுவிஸ்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று மருத்துவர் கூறியதால் முல்லை மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தார். எனவே கோவிலுக்கு சென்று தன்னை வருத்திக்கொண்டு பல வேண்டுதல்களை செய்துவந்தார்.

எனவே இதனை பார்த்த குடும்பத்தினர் அனைவரும் முல்லையை பார்த்து கவலைப்பட்டு மீண்டும் மருத்துவரை பார்ப்பதற்காக சென்றிருந்தார்கள் அங்கு மருத்துவர் இயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கு வாய்ப்பில்லை செயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியதும் மூர்த்தி பல இடங்களில் கடன் வாங்கி தற்போது ட்ரீட்மென்ட் செய்து வருகிறார்கள்.

முல்லை அதிகமாக நடக்கக்கூடாது  எந்த வேலையும் செய்யக்கூடாது என்று மருத்துவர் கூறியதால் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் பாசமாக பார்த்து வருகிறார்கள் அதோடு மற்றொரு பக்கம் கதிர் முல்லையை பாத்ரூமுக்கு கூட நடக்க விடாமல் தூக்கி கொண்டு போகிறான்.

பிறகு சாப்பாடு ஊட்டுவது,மருந்து கொடுப்பது என மிகவும் பாசமாக கவனித்து வருகிறார்.இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு சென்றார்கள்.  அப்பொழுது மருத்துவர் ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் இருப்பதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் குழந்தை கர்பமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறிவுள்ளார்.

விரைவில் முல்லை கர்ப்பமாகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு மருத்துவர் கூறியதும் ஒட்டுமொத்த குடும்பத்தின் ஏற்படும் மகிழ்ச்சியை இருந்து வருகிறார்கள். இதற்குமேல் முல்லைக்கு எப்படி குழந்தை பிறக்கிறது என்பதை மையமாக வைத்துத்தான் இனிவரும் எபிசோடுகள அமையவுள்ளது.