சினிமாவில் உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது சோசியல் மீடியாவில் தனது அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை தான் சுஜிதா. இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தனது டீனேஜ் வயதிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார் அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவர் அப்பா இல்லாமல் மூன்று தம்பிகளை வைத்து கஷ்டப்படும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் எனவே இவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார் இதன் காரணத்தினால் தனத்தை மலடியென அனைவரும் கூறுகிறார்கள் அதன் பிறகு தான் அனைவருக்கும் தெரிய வருகிறது இவர்கள் வேண்டும் என்றே தான் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.அதன் பிறகு அனைவருக்கும் திருமணமான பிறகு குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு இந்த கதையின் கதாநாயகியாக தான் சுஜிதா நடித்து வருகிறார். மேலும் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அந்த வகையில் தற்பொழுது புடவையில் மிகவும் அழகாக குடும்பப் பெண் போல் இருக்கும் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதோ அந்த புகைப்படம்.