சாதனை படைத்த பாண்டியன் ஸ்டோர் சீரியல்.! இனி வேற லெவல் தான்.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மற்றும் ஷோக்கள் போன்றவை மற்ற தொலைக்காட்சிகளை விடவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மிகவும் முக்கியமாக சீரியல்கள் இளசுகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர்களுக்கு பிடித்த வகையில் காதல் காட்சிகள் மற்றும் குடும்ப கதைகள் போன்றவற்றை இடம் பெற செய்வதால் ஏராளமான சீரியல்கள் தொடர்ந்து ஹிட் பெற்று வருகிறது.

இந்த சீரியல்கள் ஹிட் பெறுவதற்கு முக்கிய காரணம் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் வெள்ளித்திரை நடிகர்,நடிகைகள் அளவிற்கு தங்களது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்  மிகப்பெரிய சாதனை படைத்துள்ள தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், குமரன், சரவணவிக்ரம் உள்ளிட்ட இன்னும் பலரும் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் ஈரமான ரோஜாவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த சாய் காயத்ரி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியல் 700 எபிசோடுகள் நிறைவடைந்த தோடு மட்டுமல்லாமல்  தொடர்ந்து முழுமையாக மூன்று வருடங்கள் நிறைவடைந்து நான்காவது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ளது தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஹிட் பெற்ற சீரியல் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Exit mobile version