பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகும் குமரன்.! இனிமேல் இவர்தான் கதிர்.

pantiyan stores 012
pantiyan stores 012

கடந்த சில வாரங்களாக மிகவும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் நடித்து வரும் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர் கூறி,செயற்கை முறையில் கருவுருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். எனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வீடு கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை முல்லைக்கு செலவு செய்து எப்படியாவது குழந்தை பெறும் பாக்கியத்தை வெற்றி தந்த விடவேண்டும் என்று கூறி  வருகிறார்கள்.

ஆனால் மற்றொரு பக்கம் மீனா முல்லை பொறுமையாக ட்ரீட்மென்ட் செய்து கொள்ளலாம் முதலில் வீடுதான் கட்ட வேண்டும் என்று மிகவும் பிடிவாதமாக இருந்து சண்டை போட்டு வருகிறாள். பிறகு மீனாவின் அப்பா ஜீவாவை எப்படியாவது தன் பக்கம் இழுத்து தனது கடைகளையும்,  கணக்கு வழக்குகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணி வருகிறான் அதற்கான திட்டங்களையும் போட்டு வருகிறான்.

சமீபத்தில்  நெஞ்சுவலி என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவே இவரின் கடைகள் மற்றும் கணக்கு வழக்குகளை ஜீவாவை பார்த்துக் கொள்வான் என மூர்த்தி வாக்கு கொடுத்து வந்துள்ளான் எனவே ஜீவாவை பாண்டியன் ஸ்டோர் கடை பக்கம் விடாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான ஜீவா குடித்துவிட்டு வந்து சண்டை போடுகிறான்.

இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் விலகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிப்பதை நிறுத்த உள்ளாராம். இதனைப்பற்றி குமரன் எதுவும் கூறவில்லை. இதற்குமேல் கதிர் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் தான் நடிக்க இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.